உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை

-

ஓவியம் – அணிகலன்கள்

69

பட்ட பூங்கொம்பனாள் கருதிக்கொண்டு சூடிய பூவில் மிக்க களிப்பினையுடைய வண்டு ஆரவாரிப்பச் செறிந்த வளையினை யுடையாள் நின்று ஆடும், கட்டுங் கழல் வேந்தனுக்குத் துடிக் கூத்தை என்றவாறு. (மாகறலூர் கிழான் சாமுண்டி தேவநாயகன் உரை.)

கலைஞரைப் போற்றல்

பண்டைக் காலத்தில் அரசர்கள், இசைக் கலைஞருக்குப் பட்டங்களும் சிறப்புப் பெயர்களும் வழங்கினார்கள். அன்றியும் நிலபுலங்களையும் நன்கொடையாக வழங்கி ஆதரித்தார்கள்.

இயல் இசை நாடகம் என்றும் முத்தமிழிலும் வல்லவரான பெரு நம்பி என்பவருக்கு முத்தமிழ் ஆசாரியார் என்னும் சிறப்புப் பெயர் வழங்கப்பட்டுப் பொய்யாமொழி மங்கலம் என்னும் ஊர் தானமாக வழங்கப்பட்டது.48

நக்கன் உடைய நாச்சியார் என்னும் பெயருள்ள அம்மை யாருக்கு, ஞான சம்பந்தத் தலைகோலி என்னும் சிறப்புப் பெயர் வழங்கப்பட்டது.

49

ஐயாறப்பர் கோயிலுக்கு வடபக்கம் பெரிய பிராகாரத்தில் இருக்கும் சாசனம் இதைக் கூறுகிறது. இக்கோயிலுக்குப் பழைய பெயர் ஒலோக மாதேவீச்சரம் என்பது. முதலாம் இராசராசன் அரசியரில் ஒருவர் ஒலோக மாதேவியார். இவர் கட்டிய படியால் இக் கோயிலுக்கு இப்பெயர் வாய்த்தது. இக் கோயிலில், ஐயாறன் கலியுகச் சுந்தரத் தலைக்கோலி என்பவள் இருந்தாள். இவள் ஆடல் பாடல்களில் வல்ல முப்பது மாதர்களுக்குத் தலைவியாக இருந்தாள்.

நக்கன் பிள்ளை யாள்வி என்பவளுக்கு நானாதேசிதலைக் கோலியார் என்றும், நக்கன் உலகுடையாள் என்பவளுக்கு தேவகள் சுந்தரத் தலைக்கோலியார் என்றும் சிறப்புப் பெயர்கள் வழங்கப் பட்டன என்று சாசனங்கள் கூறுகின்றன.50

சோழதலைக்கோலி என்பவரை

குறிப்பிடுகிறது.51

52

இன்னொரு சாசனம்

உறவாக்கின தலைக்கோலி என்பவரை இன்னொரு சாசனம் கூறுகிறது.5 இவ்வம்மையார், திருவொற்றியூர் இராசராசன் மண்டபத்தில், திரிபுவன சக்கரவர்த்தி இராஜராஜசோழன் (III?)

"