உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

இங்கு இருந்த, வளமாக வளர்ந்து நடுத்தர வயதுள்ள ஓர் அழகிய மங்கையின் தோற்றத்தைக் காட்டுகிற கொல்லிப் பாவையைக் கண்டு ஆடவர் மயங்கினர். ஆடவரை மயக்கும் இப்பாவையைப் பற்றிச் சங்கப் புலவர்கள் தமது பாடல்களில் பாடியிருக்கிறார்கள்.

“வல்வில் ஓரி கொல்லிக் குடவரைப் பாவையின் மடவந் தனளே

மணத்தற் கரிய பணைப்பெருந் தோளே'

என்று தன் தலைவியைக் (காதலியைக்) கொல்லிப்பாவைக்கு ஒப்பாகத் தலைமகன் (காதலன்) கூறியதாக ஒரு செய்யுளைக் கபிலர் பாடுகிறார் (குறுந்தொகை, 100).

66

"களிறு கெழு தானைப் பொறையன் கொல்லி

ஒளிறுநீர் அடுக்கத்து வியலகம் பொற்பக்

கடவுள் எழுதிய பாவையின்

மடவது மாண்ட மாஅ யோளே’

என்று தலைமகன் ஒருவன் தலைமகளைக் கொல்லிப் பாவைக்கு உவமை கூறியதாகப் பரணர் பாடுகிறார் (அகம், 62).

ஆடவர் மனத்தைக் கவர்ந்து மயங்கச் செய்யும் அமைப்பு வாய்ந்த இப்பெண் உருவம், இளவெயில் காயும் போது மிகுந்த எழிலுடன் காணப்படுமாம். அன்றியும் இந்தப் பாவை, புயல் அடித்தாலும், பெருமழை பெய்தாலும், இடி விழுந்தாலும், வேறு எதனாலும் அழியாதது. ஆனபடியினாலே இதனைத் தெய்வப் பாவை என்றும், கடவுட்பாவை என்றும், மாயா இயற்கைப் பாவை என்றும் வினைமாண் பாவை என்றும், பூதம் அமைத்த விசித்திரப்பாவை என்றும் புலவர்கள் கூறினார்கள்.

"செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி நிலைபெறு கடவுளாக்கிய

பலர் புகழ் பாவை...

என்றார் கல்லாடனார் (அகம், 209).

66

“பெரும்பூண் பொறையன் பேஎமுதிர் கொல்லிக் கருங்கண் தெய்வம் குடவரை எழுதிய நல்லியற் பாவை’

என்றார் பரணர் என்னும் புலவர் (குறுந்தொகை, 89).