உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை -ஓவியம் - அணிகலன்கள் ஓவியம் - அணிகலன்கள் 115

புலவர்.

பாண்டியனின் சித்திர மாடத்தை மாங்குடிமருதனார் என்னும்

66

'கயங்கண்ட வயங்குடை நகரத்துச்

செபியன் றன்ன செஞ்சுவர் புனைந்து

என்று கூறுகிறார்.'

"குளிர்ச்சியாற் கயத்தைக் கண்டாற்போன்ற விளங்குதலை யுடைய கோயிலிடத்து (அரண்மனையில்) செம்பாற் செய்தால் ஒத்த செவ்விய சுவர்களைச் சித்திரம் எழுதி.” என்று இதற்கு நச்சினார்க்கினியர் உரை எழுதுகிறார்.

நக்கீரர் பாடிய நெடுநல் வாடையிலும் பாண்டியனுடைய சித்திரமாடம் கூறப்படுகிறது.

“வெள்ளி யன்ன விளங்குஞ் சுதையுரீஇ மணிகண் டன்ன மாத்திரட் டிண்காழ்ச் செம்பியன் றன்ன செய்வுறு நெடுஞ்சுவர் உருவப் பல்பூ வொரு கொடி வளைஇக் கருவொடு பெரிய காண்பின் நல்லில். என்று அவர் சித்திர மாடத்தை வர்ணிக்கிறார்.

66

99

'வெள்ளியை யொத்த விளங்குகின்ற சாந்தை வாரி, நீல மணியைக் கண்டாற்போன்ற கருமையினையும் திரட்சியினையும் உடைய திண்ணிய தூண்களையுடையவாய், செம்பினாலே பண்ணினா லொத்த தொழில்கள் செய்தலுற்ற நெடிய சுவரிலே வடிவழகினை யுடைத்தாகிய பலபூக்களையுடைய வல்லிசாதியாகிய ஒப்பில்லாத கொடியை யெழுதிபுதைத்தகருவோடே பெயர்பெற்ற காட்சிக்கினிய நன்றாகிய இல்.” என்று இதற்கு நச்சினார்க்கினியர் உரை எழுதுகிறார்.

பரங்குன்றத்துச் சுவர் ஓவியம்

மதுரைக்கு அருகில் உள்ள திருப்பரங்குன்றத்து மலையிலே முருகப் பெருமான் கோயிலைச் சார்ந்து ஒரு சித்திர மாடம் இருந்தது என்று குன்றம்பூதனார் என்னும் புலவர் கூறுகிறார்

66

'நின் குன்றத்து

எழுதெழில் அம்பலங் காமவேள் அம்பின் தொழில் வீற்றிருந்த நகர்.”2