உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

"நின் குன்றத்தின் கண் எழுதிய அழகையுடைய அம்பலம் அம்பினது ஏத்தொழில் நிலைபெற்ற காமவேள் சிரமச்சாலையை (ஆயுதப்பயிற்சி செய்யுமிடம்) யொக்கும்.” என்பது பரிமேலழகர் உரை.

இந்தச் சித்திர மாடத்தில் எழுதப்பட்டிருந்த சில ஓவியங்களை, நப்பண்ணனார் என்னும் புலவர் சற்று விளக்கிக் கூறுகிறார். முருகப் பெருமானை வணங்கிய பிறகு, மக்கள் இந்தச் சித்திர மண்டபத்தில் சென்று அங்குள்ள ஓவியக் காட்சிகளைக் கண்டு மகிழ்ந்தார்கள் என்றும், அங்கு எழுதப்பட்டிருந்த சித்திரங்களில் காமன், இரதி, அகலிகை, அவளிடம் சென்ற இந்திரன், கௌதம முனிவன், அவனைக் கண்ட இந்திரன் பூனை யுருவங்கொண்டோடியது முதலிய ஓவியங்கள் எழுதப் பட்டிருந்தன என்றும், இச் சித்திரங்களைக் கண்டவர் இது என்ன இது என்ன என்று அறிந்தவர்களைக் கேட்க அவர்கள் இது இது இன்னின்ன சித்திரம் என்று விளக்கிக் கூறினார்கள் என்றும் நப்பண்ணனார் கூறுகிறார்.

66

"இரதி காமன் இவள் இவன் எனாஅ விரகியர் வினவ வினாவிறுப் போரும் இந்திரன் பூசை இவளகலிகை இவன் சென்ற கவுதமன் சினனுறக் கல்லுரு ஒன்றியபடி யிதென்று ரைசெய் வோரும் இன்ன பலபல வெழுத்து நிலை மண்டபம்”3

திருச்சி ஜில்லா திருச்சி தாலுக்காவில் உள்ள திருவெறும்பூர் கோயிலைச் சார்ந்து சித்திரகூடம் என்னும் மண்டபம் பண்டைக் காலத்தில் இருந்த செய்தியைச் சாசனங்கள் தெரிவிக்கின்றன.4

பல்லவர், சோழர்கால ஓவியங்கள் காஞ்சீபுரத்துக்கயிலாசநாதர்

கோயிலிலும், தஞ்சாவூர்

பருவுடையார் கோயிலிலும், முறையே பல்லவர் காலத்துச் சித்திரமும், சோழர் காலத்துச் சித்திரமும் சுவர்களில் காணப்படு கின்றன. புதுக்கோட்டையைச் சார்ந்த சித்தன்னவாசல் குகைக் கோயிலிலும் திருநெல்வேலித் திருமலைபுரத்துக் குகைக்கோயிலிலும் பல்லவர் காலத்து ஓவியமும் பாண்டியர் காலத்து ஓவியமும் காணப்படுகின்றன. குகைக்கோயில் சித்திரங்களும் சுவர் ஓவியங் களே. குகையின் பாறைச்சுவரின் மேல் மெல்லியதாகச் சுதை பூசி அதன் மீது ஓவியங்கள் எழுதப்பட்டன. பண்டைக்காலத்தில்