உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை

-

ஓவியம் - அணிகலன்கள் 117

முக்கியமான கோயில்களில் ஓவியங்கள் எழுதப்பட்டடிருந்தன. பிற்காலத்தில் அவை அழிக்கப்பட்டு மறைந்து விட்டன.

ஓவியம் அழிக்கப்படுதல்

காஞ்சீபுரத்து நூற்றுக்கால் மண்டபத்தின் மேற்புற தளத்தில், ஓவியங்கள் எழுதப்பட்டிருந்ததைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் கண்டு வியப்படைந்தேன். இரண்டாண்டு கழித்து அந்த ஓவியங் களைப் படம் பிடிப்பதற்காகச் சென்றபோது அந்தோ! அந்தச் சிற்பங்கள் முழுவதும் மறைக்கப்பட்டிருந்ததைக் கண்டேன். கோபி நிற நீறு நன்றாகப் பூசப்பட்டு சித்திரங்கள்யாவும் மறைக்கப்பட்டுக்கிடந்தன. இவ்வாறு கலையறிவு இல்லாத “தர்மகர்த்தர்கள் எத்தனை கோயில்களில் எத்தனை சித்திரங்களை அழித்தார்களோ! பண்டைக்காலத்தில் கலைப் பெருமை யறிந்த கலையன்பர்கள் பொருள் செலவுசெய்து சித்திரங்களை எழுதி அழகுபடுத்தி வைத்தார்கள். இக்காலத்துத் “தர்மகர்த்தர்கள்” அந்தச் சித்திரங் களைச் சுண்ணம் பூசி மறைத்துக் கோயிலை “அழகு செய் கிறார்கள்!

66

و,

'சுவரை வைத்தல்லவோ சித்திரம் எழுத வேண்டும்

பண்டைக்காலத்தில் சுவர் ஓவியங்களே பெரிதும் எழுதப் பட்டன என்றும் அவை பெரும்பாலும் அரசர் அரண்மனைச் சுவர்களிலும் பிரபுக்களின் மாளிகைச் சுவர்களிலும் கோயில் சுவர்களிலும் எழுதப்பட்டிருந்தன என்று கூறினோம். பட்டினத்துப் பிள்ளையார். தாம் உலகக் காட்சியை மறந்து கடவுட் காட்சியை யடைந்ததை, சுவரில் எழுதப்பட்ட ஓவியத்துக்கு உவமை கூறுகிறார். சுவரில் எழுதப்பட்ட சித்திரங்களைக் காண்பவன் அந்த ஓவியங்கள் காட்டும் காட்சிகளைக் கண்டு மனம் மகிழ்ந்து அவற்றில் ஈடுபடுகிறான். அவன் சற்று அருகில்வந்து அந்த ஓவியங்களைக் கையினால் தடவிப்பார்க்கும்போது அவைமறைந்து சுவராகத் தோன்றுவதைக் காண்கிறான். இந்த உவமையை அவர் தமது அநுபவத்துக்கு ஒத்திட்டுக் கூறுகிறார்.

66

'யாவையும் எனக்குப் பொய்யெனத் தோன்றி

மேவரு நீயே மெய்யெனத் தோன்றினை ஓவியப் புலவன் சாயல்பெற எழுதிய

சிற்ப விகற்பம் எல்லாம் ஒன்றில்