உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை

-

ஓவியம் - அணிகலன்கள் /123

படத்திடைப் பாவை போன்றோர்

நோக்கின ளாகி நிற்ப

என்று கூறுகிறார்.

"23

விசையை என்னும் அரசி, தனக்குச் சுடுகாட்டிலே உதவி செய்த ஒரு பெண் தெய்வத்தின் உருவத்தையும், தான் ஏறிச் சென்ற மயிற்பொறி விமானத்தின் உருவத்தையும் அரண்மனைச் சுவரிலே ஓவியமாக எழுதுவித்த செய்தியைத் திருத்தக்க தேவர் கூறுகிறார்.

66

'தனியே துயருழந்து தாழ்ந்து

வீழ்ந்த சுடுகாட்டுள்

இனியாள் இடர்நீக்கி ஏமஞ்

சேர்த்தி உயக்கொண்ட

கனியார் மொழியாட்கும் மயிற்கும்

காமர் பதிநல்கி

முனியாது தான்காண மொய்கொள்

மாடத் தெழுது வித்தாள்.

9924

மகளிர் சிலர் தமது வீடுகளிலே வர்ணங்களினாலே சித்திரங் களை எழுதிக் கொண்டிருந்தபோது. தெருவிலே நிகழ்ந்த ஒரு காட்சி யின் சந்தடியைக் கேட்டுத் தாம் எழுதிய ஓவியங்களை அப்படியே விட்டுவிட்டுத் தெரு வாயிலில் வந்து நின்றதை ஒரு கவியில் கூறுகிறார்.

'வட்டிகை மணிப்பலகை வண்ணநுன் துகிலிகை இட்டிடை நுடங்கநொந் திரியலுற்ற மஞ்ஞையில் கட்டழ லுயிர்ப்பின்வெந்து கண்ணிதீந்து பொன்னுக மட்டவிழ்ந்த கோதைமார்கள் வந்துவாயில்பற்றினார்.’25

தக்க நாட்டிலே சீவகன் யாத்திரை செய்தபோது. அந்நாட்டில் காட்சியளித்த தாமரைக் குளங்கள், திரைச் சீலையில் ஓவியக் கலைஞன் எழுதிய தாமரைக் குளம் போலத் தோன்றின என்று கூறுகிறார்.

“படம்புனைந் தெழுதிய வடிவில் பங்கயத் தடம்பல தழீஇயது தக்க நாடு

"26