உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை

-

ஓவியம் - அணிகலன்கள் 147

66

“கூட்டினான் மணிபல தெளித்துக் கொண்டவன்

தீட்டினான் கிழிமிசைத் திலகவாள்நுதல் வேட்டமால் களிற்றின் முன் வெருவிநின்றதோர் நாட்டமும் நடுக்கமும் நங்கைவண்ணமே”.

(குணமாலையார் 155)

கைதேர்ந்த ஓவியர்களும் சிற்பக்கலைஞரும் தாங்கள் எழுதிய அல்லது செய்து அமைத்த மனித ஓவியங்களிலும் சிற்ப உருவங் களிலும் ஒன்பதுவகையான மெய்ப்பாடுகளையும் அமைத்தார்கள்.

சித்திரக் கலையைப் பற்றி ஓவியநூல் என்னும் புத்தகம் ஒன்று இருந்தது. அந்த நூல், சுவர் ஓவியங்கள் பிற்காலத்தில் மறைந்து போனது போலவே, பிற்காலாத்தில் மறைந்துவிட்டது. சிலப்பதிகாரம் வேனிற்காதை 25ஆம் அடியான ஒன்பான் விருத்தியுள் தலைக்கண் விருத்தி என்பதற்கு உரை கூறுகிற அடியார்க்கு நல்லார், தம்முடைய உரையில் இந்த ஓவிய நூலிலிருந்து ஒரு செய்யுளை மேற்கோள் காட்டுகிறார். அவர் எழுதுகிற உரையும் காட்டுகிற மேற்கோள் செய்யுளும் இவை.

66

இதனுள் விருத்தயென்பது இருப்பு; ஓவிய நூலுள், நிற்றல் இருத்தல் கிடத்தல் இயங்குதல் என்னும் இவற்றின் விகற்பங்கள் பலவுள; அவற்றுள், இருத்தல் திரிதர உடையனவும் திரிதர வில்லனவுமென இரு பகுதிய; அவற்றுள் திரிதரவுடையன யானை தேர் புரவி முதலியன; திரிதரவில்லன ஒன்பது வகைப்படும். அவை:- பதுமுகம், உற்கட்டிதம், ஒப்படியிருக்கை, சம்புடம், அயமுகம், சுவத்திகம், தனிப்புடம், மண்டிலம், ஏகபாதம் எனவிவை. என்னை?

‘பதுமுக முற்கட்டிதமே யொப்படி

யிருக்கை சம்புட மயமுகஞ் சுவத்திகம் தனிப்புட மண்டிலம் ஏக பாடம்

உளப்பட ஒன்பது மாகும்

திரிதர வில்லா விருக்கை யென்ப

என்றாராகலானும்,

‘பன்னாள் கழிந்த பின்னர் முன்னாள்

எண்மெய்ப் பாட்டினுள் இரக்க மெய்திரீஇ

யொண்வினை ஓவியர்கண்ணிய விருத்தியுள்