உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை

-

ஓவியம் - அணிகலன்கள்

159

மாதவி மாண்புற விளங்கினான் என்று கூறுவதிலிருந்து, மகளிர் அணிந்த அணிகலன்களை அறிந்து

அக்காலத்து கொள்கிறோம்.

G

சைவ, வைணவக் கோவில்களிலே பலவகையான தெய்வ ருவங்களும் மனித உருவங்களும் கல்லிலும் செம்பிலும் செய்து வைக்கப்பட்டுள்ளன. அந்த உருவங்களை ஊன்றிப் பார்ப் போமானால், அச்சிற்ப உருவங்கள் செய்யப்பட்ட காலத்தில் ஆண்களும் பெண்களும் அணிந்த நகைகளையும் உடைகளையும் அவற்றில் காணலாம். பழைய ஓவியங்களிலும் இவற்றைக் காணலாம். கலைக் கூடங்களாக விளங்குகிற நமது கோவில்கள் இது போன்ற பல துறை ஆராய்ச்சிகளுக்குப் பயன்படுகின்றன. ஆனால் பொதுமக்கள் இந்தச் சிற்ப உருவங்களை ஊன்றி ஆராய்ந்து பார்க்காமலிருப்பது வருந்துதற்குரியது. இனியேனும் சிற்ப உருவங்களை ஊன்றிப் பார்த்து ஆராய்வார்களாக.