உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

பரதநாட்டியக் கலை இப்போது சிறப்படைந்திருக்கிறது. இசைப் பாட்டுடன் இணைத்து இந்த நாட்டியம் ஆடப்படுகிறது. பாட்டின் பொருளுக்குப் பொருந்த அபிநயங்காட்டி, பாவகம் தோன்ற ஆடப்படுகிற இந்தக்கலை, மகளிர் மட்டும் ஆடுதற்குரியது. பரதநாட்டியத்தில் முத்திரைகள் (குறியீடுகள்) இன்றியமையாதவை. பாட்டிற்குரிய பொருள்களைக் கை முத்திரைகளினால் விளக்கிப் பரதநாட்டியம் ஆடப்படுகிறது. முத்திரைகளின் பொருளை அறிந்தால்தான் பரதநாட்டியத்தை சுவைத்து மகிழமுடியும். முத்திரைகளின் பொருளையறியாதவர் பரதநாட்டியத்தைச் சுவைத்து இன்புறமுடியாது. பரத நாட்டியத்துக்கு உயிர் போன்றவை இந்த முத்திரைகள். முத்திரைகளின் பொருளை யறியாதவர் பரதநாட்டியத்தைப் பார்ப்பது, பொருள் தெரியாமல் செய்யுளைப் படிப்பது போன்றதாகும். முத்திரைகள் இன்ன தென்பதையும் அவை எந்தெந்தப் பொருளைக் குறிக்கின்றன என்பதையும் அறிந்தவரே பரதநாட்டியத்தை நன்றாகத் துய்க்க முடியும். இதை அவிநயக்கூத்து என்பர். அவிநயக் கூத்தாவது: கதை தழுவாது பாட்டினது பொருளுக்குக் கைகாட்டி வல்லபஞ் செய்யும் பலவகைக் கூத்து என்று அடியார்க்கு நல்லார் விளக்கம் செய்வர்.

66

وو

கைமுத்திரை இரண்டு வகைப்படும், அவை ஒற்றைக் கை என்னும் இரட்டைக் கை என்றும் பெயர் பெறும். ஒற்றைக் கையைப் பிண்டிக்கை என்றும் இணையாவினைக்கை என்றுங் கூறுவர். இரட்டைக்கையைப் பிணையல் என்று கூறுவர்.

ஒற்றைக்கை

ஒற்றைக்கை என்னும் பிண்டிக்கை என்றும் இணையா னைக்கை என்றும் பெயருள்ள முத்திரைகள் முப்பத்துமூன்று. அவற்றின் பெயர்களாவன:

1. பதாகை

12. காங்கூலம்

2. திரிபதாகை

13. கபித்தம்

3. கத்திரிகை

14. நவிற்பிடி

4. தூபம்

15. குடங்கை

5. அராளம்

16. அலாபத்திரம்

23.மெய்ந்நிலை

24. உன்னம்

25. மண்டலம்

26. சதுரம்

27. மான்தலை