உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை - ஓவியம் - அணிகலன்கள் ஓவியம் - அணிகலன்கள் /215

5. காமம் அல்லது உவகை

66

"செல்வம் புலனே புணர்வு விளையாட்டென் றல்லல் நீத்த உவகை நான்கே.

6. அவலம் அல்லது அழுகை

66

99

"இளிவே யிழவே யசைவே வறுமையென விளிவில் கொள்கை யழுகை நான்கே.

"இளிவு என்பது பிறரான் இகழப்பட்டு எளியனாதல். இழவென் பது தந்தையுந் தாயு முதலாகிய சுற்றத்தாரையும் இன்பம் பயக்கும் நுகர்ச்சி முதலியவற்றையும் இழத்தல். அசைவு என்பது பண்டை நிலைமை கெட்டுவேறொருவராகி வருந்துதல். வறுமை என்பது போகந் துய்க்கப்பெறாத பற்றுள்ளம். இவை நான்குந் தன்கண் தோன்றினும் பிறண் கண் தோன்றினும் அவலமாமென்பது." (பேராசிரியர் விளக்கம்) 7. வெகுளி அல்லது உருத்திரம்

66

“உறுப்பறை குடிகோள் அலைகொலை யென்ற

வெறுப்பின் வந்த வெகுளி நான்கே.

"உறுப்பறை யென்பது, கை குறைத்தலுங் கண் குறைத்தலும் முதலாயின. குடிகோள் என்பது, தாரமுஞ் சுற்றமுங் குடிப்பிறப்பும் முதலாயவற்றுள் கேடு சூழ்தல். அலையென்பது கோல்கொண்ட லைத்தல் முதலாயின. கொலை யென்பது அறிவும் புகழும் முதலாயினவற்றைக் கொன்றுரைத்தல். இவை நான்கும் பொருளாக வெகுளி பிறக்கும். (பேராசிரியர் விளக்கம்.)

8. நகை

“எள்ளல் இளமை பேதைமை மடனென் றள்ளப் பட்ட நகைநான் கென்ப.”

ஒன்பது வகையான சுவைகளுக்கும் உரிய அவிநயங்களை நாடகத் தமிழிலக்கணத்திலிருந்து சூத்திரங்களை மேற்கோள் காட்டி விளக்குகிறார் அடியார்க்கு நல்லார்.

அச்சூத்திரங்கள் நாடக ஆராய்ச்சிக்குப் பெரிதும் பயன்படு மாகலின் அவற்றைத் தருகிறோம்.