உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

சுவைப்பொருள் என்பது, நடுநிலைச்சுவை ஒன்று தவிர ஏனைய எட்டுச் சுவைகளையும் தோன்றச் செய்யும் பொருள்.

சுவையுணர்வு என்பது, அவ் வெட்டுவகைச் சுவைகளையும் தோன்றச் செய்கிற பொருள்களைக் கண்டபோது உண்டாகிற பொறியுணர்வுகள்.

குறிப்பு என்பது, பொறியுணர்வினால் உண்டாகிறமன உணர்வு.

விரல் என்பது சத்துவம் என்றும் பெயர் பெறும். அது, மன உணர்வினால் ஏற்படுகிற மெய்ப்பாடு. அதாவது உடம்பிலே தோன்றுகிற மயிர்க்கூச்சு, நடுக்கம் முதலியன.

உதாரணம் கூறுவோம். ஒருவன் புலியைக் கண்டு அஞ்சுகிறான். புலி என்பது சுவைப்பொருள். அதனைக் கண்டபோது உண்டாகிற அச்சம் சுவையுணர்வு. உடனே ஒளிந்துகொள்ள முயல்கிறான். ஒளிவது குறிப்பு. உடம்பில் நடுக்கமும் வெயர்ப்பும் உண்டாகின்றன. இவை சத்துவம் அல்லது விறல். இவ்வாறே எட்டுச் சுவைகளுக்கும் கொள்க.

நடிப்பு அல்லது பாவகம்

அடியார்க்கு நல்லார் தமது உரையிலே, நடிகர் நடிக்க வேண்டிய அவிநயங்களை (நடிப்பு அல்லது பாவங்களை)க் கூறுகிறார். அவை இருபத்து நான்கு வகை என்று கூறி அவற்றிற்கு உதாரணமாக நாடகத்தமிழ் நூல்களிலிருந்து சூத்திரங்களை மேற்கோள் காட்டுகிறார்.12 அச்சூத்திரங்கள், நாடகம் நடிப்போருக்குப் பயன்படும் ஆதலின் அவற்றைக் கீழே தருகிறோம்.

1. வெகுண்டோன் அவிநயம்

66

"வெகுண்டோன் அவிநயம் விளம்புங் காலை மடித்த வாயும் மலர்ந்த மார்பும்

துடித்த புருவமுஞ் சுட்டிய விரலும்

கன்றின வுள்ளமொடு கைபுடைத் திடுதலும் அன்ன நோக்கமோ டாய்ந்தனர் கொளலே.

2. ஐயமுற்றோன் அவிநயம்

“பொய்யில் காட்கிப் புலவோர் ஆய்ந்த ஐய முற்றோன் அவிநயம் உரைப்பின்