உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை

-

ஓவியம் - அணிகலன்கள் /239

'சொல்லொக்குங் கடியவேகச் சுடுசரங் கரியசெம்மல்

அல்லொக்கும் நிறத்தினாள்மேல் விடுதலும் வயிரக் குன்றக் கல்லொக்கும் நெஞ்சில் தங்கா தப்புறங் கழன்று கல்லாப் புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருளெனப் போயிற்றன்றே’

-

(சொல் ஒக்கும் - (முனிவருடைய சாபமாகிய) சொல்லை ஒத்த, சரம் - அம்பு, கரியசெம்மல் - இராமன், அல்லொக்கும் நிறத்தினாள் இருளைஒத்த நிறமுடைய தாடகை, வயிரக் குன்றக்கல் - உறுதியான பாறைக்குன்று, கல் - மலைக்குன்று, பாறை)

இந்த உவமை அழகு எவ்வளவு இன்பந் தருகிறது!

'யாரே வடிவினை முடியக்கண்டார்!'

மிதிலை நகரத்தில் இராமன் உலாவுகிறான். அவனைக் கண்ட மகளிர் அவனழகைக் கண்டு வியந்தார்கள். ஆனால், அவர்கள் இராமனுடைய முழு அழகையுங் கண்டார்களா? இல்லை. அவரவர் களின் பார்வை அவனுடைய ஒவ்வொரு உறுப்பின் அழகில் மட்டும் தங்கிவிட்டு. தாங்கள் கண்ட ஒவ்வொரு உறுப்பின் அழகைமட்டும் கண்டார்கள். முழு உருவத்தின் அழகைக் காணவில்லை. தாந்தாம் கண்ட உறுப்பின் எழிலைமட்டும் அவர்கள் வியந்தார்கள். அவர்கள் கண்ட காட்சி, கடவுளின் முழு உருவத்தையுங் காணமுடியாத சமயங்கள், அவருடைய ஒவ்வொரு குணத்தை மட்டுங் கூறுவது போல இருந்தது என்று கம்பர் கூறுகிறார்.

"தோள் கண்டார் தோளே கண்டார் தொடுகழல் கமலம் அன்ன தாள்கண்டார் தாளே கண்டார்

தடக்கை கண்டாரும் அஃதே

வாள் கண்ட கண்ணார் யாரே

வடிவினை முடியக் கண்டார்!

ஊழ்கண்ட சமயத் தன்னான்

உருவுகண் டாரை யொத்தார்”.

(வாள்கண்ட கண்ணார்

வாளையொத்த கண்ணையுடைய

மகளிர். ஊழ்கண்ட ஊழினால் கண்ட, அன்னான் உருவு கடவுளுடைய உருவம்.)

பலரும் அறிந்தது இந்தச் செய்யுள்.