உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

பசையற்ற மனம்

கம்பர் பாலைவனத்தைக் கூறுகிறார். பாலைநிலம் நீர் இல்லாமல் வரண்டு கிடக்கிறது. கானல் நீராகிய பேய்த்தேர், சூரியனுடைய அனலில் நீர்நிலை போலத் தூரத்தில் காணப்பட்டாலும் உண்மையில் அது நீரற்ற வறண்ட நிலம். பாலைநிலத்தைத் துறவிகளின் மனத்துக்கும் வேசையரின் மனத்துக்கும் கம்பர் ஒப்புமை கூறுகிறார். வீடுபேற்றைக் கருதி உலகப்பற்றுக்களை விட்டுத் தவஞ்செய்கிற துறவி யரின் மனம், பசையற்று (உலகப்பற்று இல்லாமல்) இருப்பதுபோலப் பாலைநிலம் இருக்கிறது என்றார். அன்றியும் பொருள் ஒன்றையே நோக்கமாகக் கொண்ட வேசையரின் மனம், தம்மிடம் வருகிறவரிடம் அன்பு இல்லாமல் (பசையற்று) இருப்பது போலவும் பாலைநிலம் இருக்கிறது என்று கூறுகிறார்.

66

'தாவரும் இருவினை செற்றுத் தள்ளரு

மூவகைப் பகையரண் கடந்து முத்தியிற் போவது புரிபவர் மனமும் பொன்விலைப் பாவையர் மனமும்போல் பசையும் அற்றதே”.

(தாவரும் – துன்பம் வருவதற்குக் காரணமாகிய. இருவினை நல்வினை தீவினையாகிய இரண்டுவினைகள். மூவகைப்பகை - காமம் வெகுளி மயக்கம் ஆகிய பகை. புரிபவர் - செய்பவர், விரும்புகிறவர். துறவிகள் மனம் பற்றற்றது, விலைமாதர் மனம் அன்பற்றது.)

-

கடவுளின் திருவருள்

திருநாவுக்கரசர் கடவுள் பக்தர் மட்டும் அல்லர். சிறந்த இனிய கவிஞர். அவருடைய செய்யுள்கள் சொல்லழகு பொருளழகு உள்ளனவாகத் திகழ்கின்றன. அதனால்தான் அவரை நாவுக்கரசு என்று கூறினார்கள். அவருடைய கவிதைகளில் ஒன்றைமட்டும் காட்டுவோம்.

திருநாவுக்கரசர் கடவுளின் திருவருளை நிரம்பப் பெற்றவர். கடவுளின் திருவருள் நிழலில் தங்கி இன்பங் கண்டவர். அவர் தாம் கண்ட கடவுளின் திருவருள் நிழல் எப்படி இருந்தது என்பதைச் சொல்லோவியமாகத் தீட்டுகிறார்; படியுங்கள்.

“மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்