உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை

-

ஓவியம் - அணிகலன்கள் /241

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

ஈசன் எந்தை இணையடி நீழலே".

இளவேனிற்காலம், மாலை நேரம், தென்றற்காற்று, பால் சொரிவதுபோல நிலவு ஒளி, தாமரைக் குளத்தின் தண்மையான புற்றரை, வீணையின் இன்னிசை நாதம் இவ்வளவும் ஒரே இடத்தில் அமைந்திருப்பது போன்றது கடவுளின் திருவருள் என்று கூறுகிற இச்சிறு செய்யுளில் கவிதை இன்பம் கனிந்திருக்கிறதல்லவா!

6

தமிழ் மொழியிலே கவிதைகளுக்கா குறைவு! இரண்டாயிரம் ஆண்டுகளாக வளர்ந்துவருகிற தமிழ் மொழி, எத்தனையோ கவிஞர் களையும் புலவர்களையும் கண்டிருக்கிறது. அவர்கள் விட்டுச்சென்ற இலக்கியச் செல்வங்கள் கணக்கற்றவை தமிழகத்தில் இருக்கின்றன. இந்த இலக்கியச் செல்வங்களில் கணக்கற்ற நவரத்தினக் குவியல் களைக் காணலாம். குவியல் குவியலாகக் குவிந்து கிடக்கிற நவரத் தினக் கவிதைகளில் புகுந்து சிறந்த நவரத்தினங்களைத் தேர்ந்தெடுத்து அழகுகாணும் அறிஞர் சிலரே. அவர்களில் நாமும் ஒருவராக இருந்து ஆராய்ந்து மகிழ்வோமாக.