உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாட்டு ஜைன சிற்பங்களும் ஓவியங்களும்*

தமிழ் நாட்டில் ஜைன மதம் 2300 ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஜைனர் வணங்கி வழிபடுகிற கடவுளுக்கு அருகக் கடவுள் என்றும் தீர்த்தங்கரர் என்றும் பெயர். 24 தீர்த்தங்கரர் ஒருவருக்குப்பின் ஒருவராக வெவ்வேறு காலங்களில் வாழ்ந்து ஜைன சமயக் கொள்கைகளைப் போதித்தார்கள். அவர்களில் முதல் தீர்த்தங்கரர் ஆதிபகவன் எனப்படும் ரிஷிபதேவர்: கடைசியாக இருந்தவர் ஸ்ரீவர்த்தமான மாகவீரர். வர்த்தமான மாவீரர் நிர்வாண மோட்சம் அடைந்து இப்போது 2500 ஆண்டுகள் ஆகின்றன. தீர்த்தங்கரர் 24- வரின் பெயர்கள் இவை: 1 ஆதிபகவன், 2 அசிதபட்டாரகர், 3 சம்பவ நாதர், 4 அபிநந்தர், 5 சுமதிபட்டாரகர், 6 பத்மப்பிரபர், 7 சுபாரிசநாதர், 8 சந்திரப்பிரபர், 9 புட்பதந்தர், 10 சீதளநாதர், 11 சிரேம்யா, சர் 12 வாசுபூஜ்ஜியர், 13 விமலபட்டாரகர், 14 அநந்தநாதர், 15 தர்மபட்டாரகர், 16 சாந்திபட்டராகர், 17 குந்து பட்டாரகர், 18 அரபட்டராகர், 19 மல்லிநாதர், 20 முனிசுவ்விரதர், 21 நமிபட்டாரகர், 22 நேமிநாதர், 23 பாரிசநாதர், 24 வர்த்தமான மகாவீரர்.

"

தீர்த்தங்கரர் ஒவ்வொருவருக்கும் யட்சன், யட்சி என்னும் பரிவாரத் தெய்வங்கள் உண்டு. தீர்த்தங்கரர்களின் உருவங்கள் யட்சன் - யட்சி உருவங்களோடு அமைப்பதும் உண்டு: யட்சன் – யட்சி இல்லாமலும் இருப்பது உண்டு. நின்ற நிலையில் அல்லது ஆசனத்தில் அமர்ந்த நிலையில் தீர்த்தங்கரர்களின் உருவங்கள் அமைக்கப் படுகின்றன. தீர்த்தங்கரர்களின் உருவங்கள் எல்லாம் ஒரே மாதிரியாக அமைக்கப்படுகின்றபடியால் இந்த இந்த தீர்த்தங்கரர் உருவம் இன்னது என்று பிரித்து அறிவதற்காக அந்தந்த உருவங்களின் கீழே ஒவ்வொரு அடையாள முத்திரைகள் காட்டப்பட்டுள்னன. எருது, யானை, குதிரை, * முக்குடை செய் : 1980.