உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை

-

ஓவியம் - அணிகலன்கள் /243

மான், தாமரை, சுவஸ்திகம் முதலான அடையாளங்களைக் கொண்டு இன்னின்ன தீர்த்தங்கரர் உருவம் இது என்று அறிந்து கொள்ளலாம்.

ஜைனக் கோயில்களில் வணங்கப்படுகிற இன்னொரு முக்கிய திருமேனி கோமட்டேசுவரர். இவருக்குப் பாகுபலி என்றும் புஜபலி என்றும் பெயர் உண்டு. ஜைனர் வணங்குகிற யட்சன் யட்சிகளில் முக்கியமானவர் பிரமயட்சன் எனப்படுகிற சாத்தனாரும் பொன் இயக்கியாரும் ஜுவாலாமாலினியாரும் ஆவர்.

ஜைனர் தங்களுடைய தெய்வங்களின் உருவங்களைப் பாழிகளிலும் கோயில்களிலும் அமைத்து வழிபட்டார்கள். பாழி என்பது குன்றுகளிலும் மலைகளிலும் இயற்கை அமைத்த குகைகள். குகை யில்லாத மலைகளிலும் குன்றுகளிலும் கூட பாறைக்கற்களில் ஜைனத் திருமேனிகளை அவர்கள் அமைத்தார்கள். மலைப்பாறைகளில் புடைப்புச் சிற்பங்களாக அமைக்கப்பட்ட ஜைனத்திருமேனிகளை இன்றும் காணலாம். அவை கி.பி. 6-ம் நூற்றாண்டு முதல் 9-ம் நூற்றாண்டு வரையில் அமைக்கப்பட்டவை. கழுகுமலை, ஆனை மலை, அழகர்மலை, நார்த்தமலை, ஐவர்மலை, திருப்பரங் குன்றம், சித்தன்னவாசல், திருநாதர் குன்று, ஆனந்தமங்கலம், வள்ளிமலை, பேச்சிபள்ளம் முதலான குன்றுகளிலும் மலைகளிலும் தீர்த்தங்கரர் உருவங்களும் யட்சி உருவங்களும் பாறைக் கல்லில் அமைக்கப் பட்டுள்ளன.

ஜைனர் தங்களுடைய கோவில் கட்டங்களிலே அழகான வண்ண ஓவியங்களையும் எழுதி வைத்தார்கள். அந்தச் சித்திரங்கள் எல்லாம் சுவர் ஓவியங்களே. அந்தச் சுவர் ஓவியங்களிலே கருமை, வெண்மை, பச்சை, மஞ்சள், நீலம், சிவப்பு ஆகிய நிறங்கள் பயன்படுத் தப்பட்டன. அந்தச் சித்திரங்கள் தென்னிந்திய ஓவியக்கலை மரபுப்படி எழுதப்பட்டவை. நுண்கலைகளில் எளிதாகவும் விரைவாகவும் அழிந்து மறைந்து போகிற அழகுக்கலை ஓவியங்களே! காலப் பழமையினாலும் போற்றிப் பாதுகாக்கப்படாதபடியாலும் சுவர் ஓவியங்கள் எல்லாம் பெரிதும் மறைந்து போய்விட்டன. மறைந்து போன ஓவியங்களின் சில பகுதிகள் ஆங்காங்கே காணப்படுகின்றன. போரூர் திருமலைக் குகைக் கோயிலிலே கி. பி. 11 - ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட அழகான சுவர் ஓவியங்கள் நிறங்கள் மங்கி மழுங்கிப் பேறியிருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தேன். சமவசரணக்