உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை

-

ஓவியம் - அணிகலன்கள்

251

வலது பக்கமாக இன்னொரு மான் நின்று கொண்டு தன் தலையைத் தாழ்த்திப் பின்காலைத் தூக்கித் தன் மூக்கைச் சொறிகிறது. இடது புறமாக நிற்கிற மான் தன் தலையைத் தாழ்த்தி நின்று கொண்டிருப்பதுபோலக் காணப்படுகிறது. வெவ்வேறு தோற்றத்தில் காணப்படுகிற இந்த நான்கு மான்களுக்கும் தலை ஒன்றுதான்! சிற்பக் கலையில் கைதேர்ந்த சிற்பி இந்தச் சிற்பச் சிலேடையை மிக அழகாக அமைத்திருக்கிறார்! இந்தச் சிற்பத்தைக் கண்டு கண்டு மகிழலாம். இந்தச் சிற்ப விசித்திரங்களைச் செய்த சிற்பிகள் தங்களுடைய பெயர்களைச் சொல்லாமலே மறைந்து விட்டார்கள்.

நம்முடைய கோயில் கட்டிடங்கள் சிற்பக் கூடங்களாகவும் அமைந்திருக்கின்றன. அங்கு சிற்பக்கலைச் செல்வங்களும் இருக்கின் றன. கண்ணுக்குத் தெரியாத கடவுளைக் காணக் கோயில்களுக்குப் போகிறவர்கள், கண்ணுக்கு கலைவிருந்தளிக்கிற சிற்ப ஓவியங்களைக் கண்ணெடுத்தும் பார்ப்பதே இல்லை. இந்தத் தமிழ் நாட்டிலே நூற்றுக்கணக்கான, ஏன்? ஆயிரக்கணக்கான கலைப்பொருள்கள் அங்கங்கே மறைந்து கிடக்கின்றன. இந்தக் கலைச் செல்வங்கள் ‘ஏன் மக்கள் எங்களைக் காணவருவதில்லை, இந்த நாட்டின் கலைவாணர் கள் செத்துப் போனார்களா?' என்று கேட்கின்றன. ‘ஆம். சிற்பக்கலை ஓவியக்கலை உணர்வு மங்கி மறைந்து செத்துப் போய்விட்டது. தமிழகத்தில் உங்களைப் பற்றிய சிந்தனையே இல்லை' என்று நான் விடை கூறுகிறேன்.

கலைப் பொருள்கள், கலைச் செல்வங்கள், 'கலைக் கருவூலங்கள் தமிழ்நாட்டில் ஏராளமாக ஏராளமாக இருக்கின்றன.

னால், கலைச் செல்வங்களின் செல்வியைச் சிறப்பை மேன்மை யையறிந்து பாராட்டிப் போற்றிப் பாதுகாக்கத் தமிழன் இல்லை. (கலைச் செல்வங்களைத் திருடிக்கொண்டு போய் அயல்நாட்டாருக்கு விற்றுப் பொருள் சம்பாதிக்கிற ஈனர்கள் சிலர் இருக்கிறார்கள்.) தமிழ்நாட்டிலே கலைப்பொருள்கள், சிற்பக்கலை ஓவியக்கலை செல்வங்கள், ஏராளம் ஏராளம் உள்ளன. (களவுபோனது போக எஞ்சியுள்ளவை) ஆனால், இந்தக் கலைப் பொருள்களைப் பற்றிக் கூறுகிற நூல் தமிழில் ஒன்றேனும் உண்டா? ஆம் தமிழில் உண்டா என்று கேட்கிறேன்.