உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் புலவரின் சொல்லோவியம்*

அழகுக் கலைகளிலே மிகச் சிறந்தது இலக்கியக் கலை. இலக்கியக் கலை செய்யுளாகவும் இருக்கலாம், உரைநடையாகவும் இருக்கலாம். செய்யுளாக இருப்பதே சிறந்ததென்று கூறுவார்கள். காவியப் புலவராகிய இலக்கியக் கலைஞர் கவிதைகளையும் காவியங்களையும் சொல்லோவியமாகப் புனைகின்றனர். ஓவியக் கலைஞர் தங்களுடைய ஓவியத்திலும் சிற்பத்திலும் அமைத்துக் காட்ட முடியாத சில நுட்பங்களைக் காவியப் புலவர் தங்களுடைய எழுத்தோவியங்களில் அழகாக அமைத்துக் காட்டுகிறார்கள். சொற்களைக் கொண்டு நுட்பமான கருத்துக்களைப் புனைந்துரைக்கும் ஆற்றல் இலக்கியப் புலவருக்கே யுண்டு.

ஓவியங்களிலும் சிற்பங்களிலும் காட்டப்படுகிற அழகு களையும் நுட்பங்களையும் கவிதையில் காட்ட முடியாதென்றும், அவ்வாறே கவிதையில் காட்டப்படுகிற அழகுகளையும் நுட்பங் களையும் ஓவியத்திலும் சிற்பத்திலுங் காட்ட முடியாதென்றும், முன்னமே கூறினோம். இலக்கியக் கலைஞருக்கே யுரிய தனிச் சிறப்பை, ஓவியத்திலுஞ் சிற்பத்திலுஞ் காட்ட முடியாத நுட்பங் களை, இலக்கியக் கலைஞர் அமைத்துள்ள செல்லோவியங்கள் சிலவற்றை இங்கு எடுத்துக் காட்டுவோம். ஓவியக் கலைஞர், கட்புலனுக்குக் காட்டித் தெரிவிக்க முடியாத சில விடயங்களைக் கவிஞர் தம்சொற்க ளினாலே எளிதாக அறிவுப் புலனுக்குக் காட்டித் தெரிவிக்கிறார். ஓவியக் கலையில் அமைத்துக் காட்ட முடியாத கருத்துக்களை இலக்கியக் கலைஞர் தம்முடைய சொல்லோவியங்களில் எவ்வாறு எளிதாக அமைத்துக் காட்டுகிறார் என்பதைப் பார்ப்போம்.

காதலின் அளவு:

இரண்டு இளம்பெண்கள் கடற்கரையில் வெண்மணலில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருத்தி காதலையறித்த கன்னிப்

  • செந்தமிழ் செல்வி : 52. 1977