உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை

பழைய சாசன வெளியீடுகளைப் படித்துக் கொண்டிருந்த போது அவற்றின் இடையுடையே சில சாசனங்கள் செய்யுளாக அமைந் திருப்பதைக் கண்டேன். கண்டபோது, அச் செய்யுட்களைத் தொகுத்து வைப்பது நலம் என்று தோன்றியது. வெவ்வேறு காலத்திலே வெவ்வேறு இடங்களில் இருந்த புலவர்கள் அவ்வபோது பாடிய தனிச் செய்யுட்களைப் பிற்காலத்தவர் தொகுத்துத் தனிப்பாடற்றிரட்டு என்னும் பெயருடன் வெளியிட்டுருப்பதைப் படித்து நாம் பல செய்திகளைத் தெரிந்துகொள்கிறோம். அதுபோலவே, வெவ்வேறு ஊர்களிலே வெவ்வேறு காலத்தில் சாசனங்களிலே எழுதப்பட்ட செய்யுள்களைத் தொகுத்து வெளியிட்டால், அது தமிழ் இலக்கிய வரலாற்றினை ஆராய்வதற்கும், அக்காலத்து அரசியல் சமூக இயல் வரலாறுகளைத் தெரிந்து கொள்வதற்கும் பெரிதும் துணையாக இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. ஆகவே, சாசனங்களில் காணப்படுகிற செய்யுள்களைத் தொகுத்துச் 'சாசனச் செய்யுள் மஞ்சரி' என்று பெயரிட்டு அமைத்தேன்.

பிறகு, இது போன்று, கன்னடம் தெலுங்கு சமஸ்கிருதம் என்னும் மொழிகளில் உள்ள சாசனங்களிலும் செய்யுள்கள் இருப்பதையறிந்து, அச்செய்யுள்களைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார்களா, என்றறிய, அறிந்தவர்களை உசாவினேன். கன்னடம், தெலுங்கு, சமஸ்கிருத மொழிகளில் உள்ள சாசனச் செய்யுள்களைத் தொகுத்து அந்தந்த மொழியில் வெளியிட்டிருக்கிறார்கள் என்பதை அறிந்தேன். ஆகவே, நான் தொகுத்த தமிழ்ச் சாசனச் செய்யுட்களை அச்சிட்டு வெளியிட வேண்டும் என்று எண்ணினேன்.

சாசனங்களிலே, பெரும்பாலும் அரசர்களின் மெய்க் கீர்த்திகள் செய்யுளாக அமைந்திருக்கின்றன. அந்த மெய்க் கீர்த்திச் செய்யுட்களை மட்டும் சிலர் தொகுத்து வெளியிட்டிருக்கிறார்கள். ஆனால், மெய்க்கீர்த்தி அல்லாத வேறு தனிச் செய்யுட்களைத்