உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

19

தொகுத்து இதுவரையில் சரிவர அச்சிடவில்லை. ஆகவே, மெய்க் கீர்த்திச் செய்யுட்களைத் தவிர, ஏனையச் சாசனச் செய்யுட்களைத் தொகுத்து வெளியிடுவது மிகத் தேவையானதென்பதைக் கண்டேன். ஏனென்றால், சாசனங்களைத் தொகுதி தொகுதியாக அச்சிட்டிருக்கிற செய்திப் பலருக்குத் தெரியாது. தெரிந்த சிலரில், பலர் சாசன சாலைகளில் (இரண்டொரு புத்தகச்சாலைகள் தவிர) சாசன வெளியீடுகள் காணப்படுவதில்லை. சில சாசன வெளியீடுகள் இப்போது விலைக்குக் கிடைப்பதும் இல்லை. இவ்வாறு சாசன வெளியீடுகள் கிடைப்பதற்கு அரிய அரும்பொருளாக உள்ளன.

அரிதில் முயன்று தேடிக் கண்டுப்பிடித்தாலும், வசன சாசனங்கள் எவை, செய்யுள் சாசனங்கள் எவை என்பதைக் கண்டு பிடிப்பது எளிய காரியம் அல்ல. ஏனென்றால், கருங்கல்லிலும் செப்பேட்டிலும் சாசனச் செய்யுள்களைச் செதுக்கியவர்கள், செய்யுள் களைச் செய்யுள் அமைப்புப்படி அடிபிரித்து எழுதாமல், வசனங் களை எழுதிவைப்பதுபோல எழுதி வைத்தார்கள். இதனால், வசன சாசனங்களிலிருந்து செய்யுட் சாசனங்களைப் பிரித்தறிவது எளிதானதல்ல. அதிலும் அச்சுப் புத்தங்களில் செய்யுள்களைப் படித்துப் பழகியவர்கள், (ஓலைச்சுவடியில் செய்யுள்களைப் படித்துப் பழகாதவர்கள்) சாசனங்களிலுள்ள செய்யுள்களைக் கண்டறிவது மிகமிகக் கடினமானது. சிறிதாவது செய்யுள் இலக்கணம் அறிந்தவர் களும் செய்யுள்களை ஏட்டுச்சுவடியில் படித்துப் பழகியவர் களுந்தான் சாசனங்களில், அடிபிரித்து எழுதாமல் நெடுக எழுதியுள்ள செய்யுட்களைக் கண்டறிய முடியும்.

மேலும், இந்திய சாசனங்கள் என்னும் சாசன வெளியீட்டில், சாசன வாசகங்களை இலத்தின் (ஆங்கில) எழுத்தினால் அச்சிட்டி யிருக்கிறார்கள். தமிழ் தெலுங்கு கன்னடம் முதலிய மொழிகளில் எழுதப்பட்டுள்ள சாசனங்களை ஆங்கில எழுத்தில் அச்சிட்டால் அவற்றை யார் படிப்பார்கள்? இவ்வாறு பதிப்பித்துள்ள சாசனங்களைப் படிப்பதில் உச்சரிப்பு இடர்பாடுகள் பல உண்டு.

இது ஒருபுறமிருக்க, தமிழ் எழுத்தில் பதிப்பித்துள்ள சாசனங் களைப் படிப்பதிலும் எழுதுவதிலும் சில இடர்பாடுகளும் துன்பங்களும் உண்டு. 'எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான்' என்னும் பழமொழி எழுதினவர்களுக்கு மட்டும் அல்லாமல்,

ஓலைச்சுவடிகளை