உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

செப்பேட்டை எழுதினவனுக்கும் கருங்கல்லில் எழுதினவனுக்கும் கூட முழுவதும் பொருந்தும். எப்படி என்றால், இவர்கள் எல்லோரும், புள்ளிப் பெறவேண்டிய எழுத்துக்களுக்குப் பெரும்பாலும் புள்ளி வைத்து எழுதுவதில்லை : மிக அருமையாக யாரோ ஒருவர்தான் புள்ளி அமைத்து எழுதுவார்கள். இதில் உள்ள இன்னொரு சங்கடம் என்னவென்றால், இக்காலத்து மெய்யெழுத்துக்களைப்போலவே அக்காலத்து மெய்யெழுத்துக்களும் புள்ளிப் பெற்றிருந்ததோடு எகர ஒகரக் குற்றெழுத்துக்களும் அக்காலத்தில் புள்ளிபெற்றிருந்தன.

இக்காலத்தில் எகர ஏகார ஓங்காரங்களுக்குத் தனித்தனி எழுத்துக்கள் புள்ளியிடப்படாமல் எழுதப்படுகின்றன. ஆனால், அக் காலத்தில் இவ்வவெழுத்துக்களைப் புள்ளி அமைத்தும், புள்ளி அமைக்காமலும் எழுதிவந்தார்கள். புள்ளியிடப்பட்ட எகர ஒகரங்கள் குற்றெழுத்தாகவும் புள்ளியிடப்படாத எகர ஒகரங்கள் நெட்டெழுத் தாகவும் அக்காலத்தில் வாசிக்கப்பட்டன. ஆனால், கல்லிலும் செம்பிலும் ஏட்டிலும் எழுதிய அக்காலத்து எழுத்தாளர்கள் புள்ளியிட வேண்டிய எழுத்துக்களுக்கும் (எகர ஒகர மெய்யெழுத்துக்கள்) புள்ளியிடாமல் எழுதிவைத்தார்கள். எகர ஒகரக் குற்றெழுத்துக் களுக்கும் மெய்யெழுத்துக் களுக்கும் புள்ளியிட்டெழுத வேண்டும் என்று நன்னூள் சூத்திரமும் தொல்காப்பிய சூத்திரமும் கூறுகின்றன. “மெய்யின் இயற்கை புள்ளியோடு நிலையல்"

என்றும்,

66

“எகர ஒகரத் தியற்கையும் அற்றே’

என்றும் தொல்காப்பிய இலக்கணம் (எழுத்ததிகாரம், சூத்திரம் 15, 16) கூறுகிறது.

"தொல்லை வடிவின எல்லா எழுத்தும் ஆண்டு

எய்தும் எகர ஒகரமெய் புள்ளி

என்று நன்னூல் சூத்திரம் கூறுகிறது.

இந்த இலக்கண முறைப்படி புள்ளி பெறவேண்டிய எழுத்துக்கள் எவை என்பதை நன்றாகத் தெரிந்துகொண்டால் தான், சாசனங்களைப் பிழையில்லாமல் படித்து அறிய முடியும். இல்லை யேல் தவறுகள், பெருந்தவறுகள் ஏற்படும். சில உதாரணங்களை காட்டுவோம் :