உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள் 21

எறு, ஒது என்று சாசனங்களில் எழுதியிருந்தால் இவற்றை முறையே ஏறு, ஓது என்று வாசிக்கவேண்டும். பழைய இலக்கண முறைப்படி. இவற்றின்மேல் புள்ளி இல்லாதபடியால் இவ்வெழுத்துக் களை நெட்டெழுத்தாகக் கொள்ளவேண்டும். (ஆனால் புள்ளி யிடாமலே எழுதுவது அக்காலத்து எழுத்தாளர் வழக்கமாகையால் இதை நெட்டெழுத்தாகக் கொள்வதா, குற்றெழுத்தாகக் கொள்வதா என்கிற ஐயம் ஏற்படுகிறது.) இவ்வாறு மெகம, செரி, மெய, தெனருந்த, பெசி, முன்று, தெங்கமழ, செவவெல, வெடகை, வெறு, செறு, தெவர, குண்டுர, தந்தென என்று சாசன எழுத்துக்களில் எழுதப்பட்டிருக்கும். இவற்றை முறையே மேகம், சேரி, மேய், தேனருந்த, பேசி, மூன்று, தேங்கமழ், செவ்வேல், வேட்கை, வேறு, சேறு, தேவர், குண்டூர், தந்தேன் என்று இடமறிந்து வாசிக்க வேண்டும்.

கொடல, கொலவளை, மலரொன, பொல, பெரருளான, நொக்கி, சொனனொம், கொளரி, பொதிநிழல, பொர்த்தனன, வானறொய, தெனறொய, கொளரவம், மெநதன என்று சாசனங்களில் எழுதப்பட்டிருக்கும். இவற்றை முறையே கோடல், கோல்வளை, மலரோன், போல, பேரருளான், நோக்கி, சொன்னோம், கோளரி, போதிநிழல், போர்த்தன்ன, வான்றோய், தேன்றோய், கோளரவும், மேந்தன் என்று இடமறிந்து வாசிக்கவேண்டும்.

சில சொற்கள், இகரத்திற்கும் ஈகாரத்திற்கும் வேறுபாடு தோன்றாமல் எழுதப்பட்டிருக்கும். விதி, வெலை, நிர், நிலம், கண்டிர, திரும, சிரமை, நிடிய, விரன என்றிருப்பதை முறையே வீதி, வேலை, நீர், நீலம், கண்டீர், தீரும், சீர்மை, நீடிய, வீரன் என்று வாசிக்கவேண்டும். இவ்வாறு பண்டைக் காலத்துச் சாசன எழுத்துக்களை வாசிப்பதில் சில இடர்பாடுகள் உள்ளன.

இத்தகைய இடர்களும் துன்பங்களும் ஒருபுறமிருக்க, வேறு சில துன்பமும் காணப்பட்டன. அவை என்னவென்றால், சாசனச் செய்யுள்கள் சிலவற்றில் இடையிடையே சில பல எழுத்துக்கள் மறைந்துள்ளன. இடையிடையே எழுத்துக்கள் மறைந்துபோன செய்யுள்களை அடிபிரித்துச் செய்யுள் உருவத்தில் அமைப்பது கடினமானது. கட்டளைக் கலித்துறை போன்ற செய்யுட்கள் சிலவற்றில், செய்யுள் இலக்கண முறைக்கு மாறுபட, சில அடிகளில் அதிக எழுத்துக்களும் சில அடிகளில் குறைந்த எழுத்துக்களும் காணப்படு