உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

வஞ்சியர் குலபதி எழினி வகுத்த

வியக்க ரியக்கியரோ

டெஞ்சிய வழிவு திருத்தியிவ் வெண்குண

விறைதிரு மலைவைத்தான்

அஞ்சிதன் வழிவருமவன் வழிமுதலி

அதிகன் வகன் நூல்

விஞ்ஞையர் தலபுனை தகடையர் காவலன் விடுகாதழகிய பெருமாளேய்.

45

குறிப்பு:- இயக்கர் இயக்கியர் - யக்ஷன், க்ஷி. இவர்கள் அருகக் கடவுளின் பரிவாரத் தெய்வங்கள். எண்குண இறை எட்டுக் குணங்களையுடைய அருகக் கடவுள். வகன் - குபேரன். தகடை - தகடூர். இச்செய்யுளின் ஏகார ஈறு அந்தக் காலத்து வழக்கப்படி யகரமெய் பெற்றுள்ளது.

இவ்வரசர்கள், கடை எழு வள்ளல்களில் ஒருவனாகிய அதிகமான் நெடுமானஞ்சியின் மரபில் வந்தவர்கள் எனத் தெரிகின்றனர்.

குணவீர முனிவர்

இடம் : வடஆர்க்காடு மாவட்டம், போளூருக்கு அருகில் உள்ள திருமலை என்னும் ஊர். இவ்வூர் ஏரியின் மதகில் உள்ளது இந்தச் சாசனம்.

பதிப்பு : எண் 66. தென் இந்திய சாசனங்கள், தொகுதி ஒன்று. (No. 66. S.I.I. Vol. I.)

விளக்கம் : இவ்வூர் வைகைத் திருமலை என்றும், வைகாவூர் திருமலை என்றும் கூறப்படும். இது பேர்போன ஜைனத் திருப்பதி. இவ்வூர் குந்தவை ஜினாலயம் பேர்போனது.

குணவீரமாமுனிவர் என்பவர், கணிசேகர மருபொற் சூரியன் என்பவர் பெயரினால், நிலங்களுக்கு நீர் பாய இவ்வூர் ஏரியில் கலிங்கு கட்டியதை இந்தச் செய்யுள் கூறுகிறது. இந்தச் செய்யுளுக்கு மேலே, இராஜராஜ சோழனின் மெய்க் கீர்த்தி கீழ்க்கண்டபடி எழுதப் பட்டிருக்கிறது :-