உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

77

குறிப்பு:- இச்செய்யுளில் சில சொற்கள் இவ்வாறு பயின்றுள்ளது காண்க: அரிச்சனை (அருச்சனை), துழதி (தொகுதி), மகுழ்வது (மகிழ்வது), உள்ப்படுத் துயந்த (உட்படுத்துயர்ந்த), குடுத்த (கொடுத்த), ஞாழி (நாழி), ஞெல் (நெல்), ஞீக்கி (நீக்கி), ஞிலம் (நிலம்).

இச்செய்யுட்களில் கூறப்படும் திருப்பணிகள் இராஜராஜ சோழனுடைய ஆட்சி இருபத்தேழாவது ஆண்டில் செய்யப் பட்டன.

அரும்பாக்க எல்லை

இடம் : தென்ஆர்க்காடு மாவட்டம், திருக்கோயிலூர் தாலுகா, கீழுர். இவ்வூர் வீரட்டானேசுவரர் கோவில் தென்ப் புறச் சுவரில் உள்ளது.

பதிப்பு : எண் 857. தென் இந்திய சாசனங்கள், தொகுதி ஏழு. (No.857. S.I.I. Vol. VII.)

விளக்கம் : கோவிராஜ ராஜகேசரி பன்மர் என்னும் சோழ அரசனுடைய 11-ஆம் ஆண்டில் எழுதப்பட்டது இச்சாசனச் செய்யுள். இது அரும்பாக்கம் என்னும் ஊரின் எல்லையைக் கூறுகிறது. இந்தச் சாசனச் செய்யுளின்மேலே கீழ்க்கண்ட வசனம் எழுதப்பட்டிருக்கிறது.

"ஸ்வஸ்திஸ்ரீ. காந்தளூர்சாலை கலமறுத்த கோவிராஜ ராஜ கேசரிய் பன்மக் கியாண்டு 11 - ஆவது மலாட்டு குறுக்கைக் கூற்றத்து திருக்கோவலூர் திருவீரட்டான முடையாற்கு மிலாடு உடையான் இராமன் நாட்டடிகள் வைத்த நொந்தா விளக்கு ஒன்றுக்கும் திருவுண்ணாழிகை சபையார் வசம் சந்த்ராதித்தவல் விளக்கெரிப் பதற்குக் குடுத்த பொன் பன்னிரு கழஞ்சு. பன்மாஹேஸ்வர ரக்ஷை. சாசனச் செய்யுள்

இறைவ னரும்பாக்க மெல்லைக் கற்குட்டம்

முறைசேர் கோவல் முழைசுனை - பிறைநுதலாய் வெண்மாறங் கெல்லை மேல்பால் கறடிவடாவாறு கீழ்பால் கண்ணத்தம் பாடியாங் காண்.

குறிப்பு :- இவ்வெண்பாவின் மூன்றாமடி பொருந்தவில்லை.