உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -14

விளக்கம் : புத்தன் இராசசிங்கன் என்பவன் இந்த கோவிலின் முன் மண்டபத்தைக் கட்டியதை இந்த செய்யுள் கூறுகிறது. இவன் கோ இராஜராஜ ராஜ கேசரி பர்மன் என்னும் சோழ மன்னனுக்கு கீழடங்கிய சிற்றரசன்.

சாசனச் செய்யுள்

சீராருந் தென்கிடங்கிற் றிண்டீச்சரத் தரனுக் கேராருங் கன்மண்டப மெடுத்தான் - பாராரும் பொன்னான பூமகள்சேர் புத்தன் இராசசிங்க னென்னானை ஆறையா றேறு.

புத்த னிராசசிங்கன் ஏவத் திருத்திண்டீஸ்வரமுடையார் மண்டபம் செய்வித்தான் வாகூர் சிவப்பிராமணன் திருமாங் கோயில் வாணகோவரையன்.

குறிப்பு :- கிடங்கில் என்பது திண்டிவனத்தின் பழையப் பெயர். இந்த மண்டபம் அமைந்த இராசசிங்கனின் மனைவி கண்ணன் அருஞ்சிகைப் பிராட்டி என்பவர், இந்தக் கோவிலுக்கு விளக்கு எரிப்பதற்காக ஆடுகளை தானம் செய்திருக்கிறார். “இவ்வூர் கடம்புழான் புத்தன் இராசசிங்கன் அகமுடையாள் கண்ணன் அருஞ்சிகைப் பிராட்டி வைத்த நந்தா விளக்கு இரண்டினுக்கு விட்ட சாவாமூவாப் பேராடு நூற்றெண்பது” என்று இக்கோவிலிலுள்ள இன்னொரு சாசனம் கூறுகிறது. (No.836. S.I.I. Vol. VII.)

நரேந்திரப் போத்தரையன்

இடம் : தென்ஆர்க்காடு மாவட்டம், திண்டிவனம் தாலுகா, தளவானூர். இவ்வூரில் உள்ள பாறைக்குன்றில் அமைக்கப்பட்ட குகைக் கோயிலின் தூணில் உள்ள செய்யுள்.

பதிப்பு : இந்திய சாசனங்கள், தொகுதி 12. பக்கம் 225 - 26. (Epigraphia Indica Vol. VII. P. 225 - 26.)

விளக்கம் : நரேந்திரப் போத்தரையன் என்பது மகேந்திரவர்மன்| உடைய சிறப்புப் பெயர். இவன் கி.பி. 600 முதல் 630 வரையில் அரசாண்ட பல்லவ அரசன். முதன் முதலாக தமிழ் நாட்டிலே பாறைகளை குடைந்து குகைக் கோயில்களை அமைத்தவன் இவனே. வெண்பேடு இப்போதுள்ள தளவானூருக்குப் பழைய பெயர். சத்துருமல்லன் என்பதும் முதலாம் மகேந்திர வர்மனுடையப் பெயர்.