உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

சாசனச் செய்யுள்

தொண்டையந் தார்வேந்தன் நரேந்திரப் போத்தரையன் வெண்பேட்டின் தென்பால் மிகமகிழ்ந்து - கண்டான் சரமிக்க வெஞ்சிலையான் சத்துருமல் லேஸ்வராலயமென் றரனுக் கிடமாக வாங்கு.

81

இவ்வூர் பிரம மங்கலவன் செல்வன் சிவதாசன் சொல்லியது.

குறிப்பு இதுவரையில் நமக்குக் கிடைத்துள்ள சாசனச் செய்யுட்களில் இதுவே காலத்தினால் முற்பட்டது. நரேந்திர போத்தரையன் என்பவன், இக்குகைக் கோயிலை அமைத்து இதற்குச் சத்துருமல்லேஸ்வராலயம் என்று பெயரிட்டதை இச்செய்யுள் கூறுகிறது. இச்செய்யுளைப் பாடியவர் பிரமமங்கலவன் செல்வன் சிவதாசன் என்பவர். கி.பி. 7-ஆம் நூற்றாண்டு.

காடவராயர்கள்

இடம் : தென்ஆர்க்காடு மாவட்டம், விருத்தாசலம் தாலுகா, விருத்தாசலம். வேதகிரீசுவரர் கோவிலின் இரண்டாவது கோபுர வாயிலின் வலப்புறத்தில் உள்ள சாசனம்.

பதிப்பு : எண் 263. தென் இந்திய சாசனங்கள், தொகுதி பன்னிரண்டு. (No. 263. S. I. I. Vol. XII.)

ளக்கம் : கீழ்க்கண்ட செய்யுட்கள் காடவராயர் சிலரைப் புகழ்கின்றன. காடவராயர் என்பவர் பல்லவ அரசர்கள். வளந்தா னாரான காடவராயரையும், அவர் மகன் ஆட்கொள்ளியாரான காடவரா யரையும், அவர் மகன் நாலுதிக்கும் வென்றாரான ஏழிசை மோகன் காடவராயரையும், அவன் தம்பி அரசநாராயணன் கச்சிராயரான காடவராயரையும் புகழ்கின்றன.

இந்தச் செய்யுட்கள் எழுதப்பட்டுள்ள கோபுரவாயிலுக்குக் கண்டராதித்தன் வாசல் என்று பண்டைக் காலத்தில் பெயர் வழங்கப்பட்டது.