உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

/ 85

பதிப்பு : இந்திய சாசனங்கள், தொகுதி பதினொன்று : பக்கம் 154-158.(Epigraphia Indica Vol. XI. Page. 154 - 158.)

விளக்கம் : இந்தக் கிணறு, பல்லவ அரசனான தந்திவர்மன் காலத்தில் அமைக்கப்பட்டது. இக்கிணற்றை அமைத்தவன், கம்பன் அரையன் என்பவன். இந்தச் சாசனச் செய்யுளுக்கு மேலே, கீழ்கண்ட செய்தி எழுதப்பட்டிருக்கிறது :

"ஸ்வஸ்திஸ்ரீ. பாரத்துவாஜ கோத்திரத்தின் வழித் தோன்றிய பல்லவ திலக குலோத்பவன் நந்திவர்ம்மற்கு யாண்டு நான்காவ தெடுத்துக்கொண்டு ஐந்தாவது முற்று வித்தான், ஆலம்பாக்க விசையநல்லூழான் தம்பி கம்பன் அரையன் திருவெள்ளரைத் தென்னூர்ப் பெருங்கிணறு. இதன்பியர் மார்ப்பிடுகு பெருங் கிணறெண்பது. இது ரக்ஷிப்பார் இவ்வூர் மூவாயிரத்தெழுநூற்று வரும்." சாசனச் செய்யுள்

கண்டார் காணா வுலகத்திற் காதல் செய்து நில்லாதேய் பண்டேய் பரமன் படைத்தநாள் பார்த்து நின்று நையாதேய் தண்டார் மூப்பு வந்துன்னைத் தளரச் செய்து நில்லாமுன் னுண்டேல் லுண்டு மிக்கது உலகம் மறிய வைம்மினேய்.

குறிப்பு :- இச்செய்யுளில் ஏகார ஈற்றுச் சொற்கள் யகர மெய் பெற்று நில்லாதேய், பண்டேய். நையாதேய், வைம்மினேய் என்று வந்திருப்பது கருதத்தக்கது. பண்டைக் காலத்துச் சாசனப் பாடல்களில் பெரும்பாலும் இவ்வாறே உள்ளன.

குருகூர் நம்பி

டம் : திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளி தாலுகா, அன்பில் கிராமம், சுந்தரராசப் பெருமாள் கோவில் வடக்குப் புறச் சுவரில் உள்ளது.

பதிப்பு : தென் இந்திய சாசனங்கள், தொகுதி எட்டு : எண் 187. (No. 187. S. I. I. Vol. VIII.)