உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

அபராஜிதவர்மன் பல்லவ அரசர்களில் கடைசி அரசன். பல நூற்றாண்டுகளாகப் பல்லவ அரசர்களுக்கு கீழடங்கியிருந்த சோழ அரசர், அபராஜிதவர்மனை வென்று சோழப் பேரரசை நிறுவினார்கள். சாசனச் செய்யுள்

"திருந்து திருத்தணியில் செஞ்சடை யீசர்க்குக் கருங்கல்லால் கற்றளியா நிற்க - விரும்பியே நற்கலைக ளெல்லாம் நவின்றசீர் நம்பிஅப்பி பொற்பமைய செய்தான் புரிந்து.

இ வெண்பா பெருமானடிகள்தாம் பாடி அருளுத்து.’

குறிப்பு :- வெண்பாவின் கீழுள்ள வாக்கியத்தில், பெருமானடிகள் என்பது அபராஜித வர்மன் என்னும் பல்லவ அசனைக் குறிக்கிறது. 'பாடி அருளுத்து' என்றிருப்பது 'பாடி அருளியது' என்றிருக்க வேண்டும்.

இந்தச் சாசனம் உள்ள வீரட்டானேசுவரர் கோவில், பல்லவ அரசர்கள் கட்டிய கடைசி கோவில் என்பதையும், இக் கட்டடத்தின் சிறப்பியல்புகளையும் வெளிப்படுத்தியவர், பிரெஞ்சுக்காரராகிய மூவோ தூப்ராய் ஆவார். இவர் எழுதிய Pallava Antiquities Vol. II என்னும் நூலில் இக்கோவிலைப் பற்றிக் காணலாம்.

காமவில்லி

இடம் : சித்தூர் மாவட்டம், கீழ்த் திருப்பதியில் அலிபிரி என்னும் இடத்தில் உள்ள பெரியாழ்வார் கோவிலின் மேற்குப்புறச் சுவரில் உட்பகுதியில் உள்ள சாசனம்.

பதிப்பு: திருப்பதி தேவஸ்தானத்துச் சாசனங்கள், முதல் தொகுதி, எண் 177. (No. 177. T. D. I. Vol. I. )

விளக்கம் : பூவை நகரத்துக் காமவல்லி என்பவர், அம்மை ஏரி என்னும் ஏரியைத் திருவேங்கடப்பெருமாளுக்குத் தானமாகக் கொடுத்ததைக் கூறுகிறது இச்செய்யுள்.