உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

131

விளக்கம் : இந்தச் சோமநாதர் கோவில், முற்காலத்தில் சோளேந்திரசிங்கர் கோவில் என்று பெயர்பெற்றிருந்தது என்பது இந்தச் செய்யுளினால் தெரிகிறது. இந்தச் செய்யுளுக்கு மேலே இவ்வாக்கியம் எழுதப்பட்டிருக்கிறது :

“இராஜராஜ தேவற்கு யாண்டு எட்டவாது. சிறை மீட்ட பெருமாளான சீயகங்க தேவர் மாமன் மதுராந்தகப் பொத்தப்பிச் சோழன் புடொலி அரசன் இத் திருமண்டபம் செய்வித்தான்.

சாசனச் செய்யுள்

பொத்தப்பிச் சோழன் புடோலி அரசன் புவிமே

லெத்திசையுஞ் செல்லும்எழில் மேற்படி - மெய்த்தவத்தாற் சோளேந்திர சிங்க நாயகற்குத் துகவமணி

வளேந்து மண்டபஞ் செய்தான்.

குறிப்பு :- மூன்றாம் அடியில் 'துகவமணி' என்றிருப்பது 'துங்கமணி' என்றிருக்க வேண்டும்.

நம்பி அப்பி

இடம் : சித்தூர் மாவட்டம், திருத்தணி டிவிஷன், திருத்தணி. இவ்வூரில் உள்ள வீரட்டானேசுவரர் கோவிலின் தென்புறச் சுவரில் உள்ளது இச் சாசனச் செய்யுள்.

பதிப்பு: தென் இந்திய சாசனங்கள், தொகுதி பன்னிரண்டு : எண் 94. (No. 94. S. I. I. Vol. XII. )

விளக்கம் : திருத்தணிகை வீரட்டானேசுவரர் கோவில், யானைக் கோவில் (கஜபிருஷ்ட விமானம்) ஆக அமைந்திருக்கிறது. இக் கற்றளி, அடிமுதல் முடிவரையில் கருங்கல்லினால் கட்டப்பட்டது. இதனைக் கட்டியவர் நம்பி அப்பி என்பவர். இது, பல்லவ மன்னன் அபராஜித வர்மன் காலத்தில் கட்டப்பட்ட கோவில். இந்தச் சாசன வெண்பாவைப் பாடியவன் அபராஜித வர்மனே.