உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

ஒபௗநாதன்

டம் : சித்தூர் மாவட்டம், சந்திரகிரி தாலுகா, திருப்பதி திருமலையில் உள்ள ஸ்ரீநிவாசப்பெருமாள் கோவில் முதல் பிராகாரம் தென்புறச் சுவரில் உள்ளது இச்செய்யுள்.

பதிப்பு : தென் இந்திய சாசனங்கள், தொகுதி நான்கு : தொகுதி, எண் 297. (No. 297, S. I. I. Vol. IV. )

திருப்பதி தேவஸ்தானத்துச் சாசனங்கள்: முதல் தொகுதி, எண் 117. (No. 117. T. D. I. Vol. VI. I. )

விளக்கம் : ஒபௗநாதன் என்பவர், திருவேங்கடப் பெருமா ளுக்குத் திருக்கைமலர் (கைக்கவசம்) தானம் செய்ததை இச்செய்யுள் கூறுகிறது.

சாசனச் செய்யுள்

ஒதவளர் வண்மை யொபளநாதன் தஞ்சை

யாதவர்கோன் வாழ வினிதூழி - போத

மருக்குலவுஞ் சோலை வடவேங்கட வாணர்க்குத் திருக்கைமலர் தந்தான் சிறந்து.

குறிப்பு : இரண்டாம் அடியில், வாழவினி தூழி என்றிருப்பது வாழ்க வினிதூழி என்றிருத்தல் வேண்டும். மரு-மணம். இதில் கூறப்படுகிற ஒபௗநாதன் ஹொபள யாதவன் ஆவான். இவன் யாதவராயர் என்னும் அரச பரம்பரையைச் சேர்ந்தவன் போலும்.

புடோலி அரசன்

இடம் : சித்தூர் மாவட்டம், சித்தூர் தாலுகா, மேல்பாடி கிராமத்துச் சோமிநாதேசுவரர் கோவில் மகாமண்டபத்தின் தெற்குச் சுவரில் உள்ள உள்ள சாசனம்.

பதிப்பு : தென் இந்திய சாசனங்கள், தொகுதி நான்கு : எண் 317. (No. 317. S. I. I. Vol. IV. )