உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரகுண பாண்டியனின் திருத்தொண்டுகள்*

வரகுண பாண்டியனுக்கு கோமாறஞ் கடையன் என்னும் பட்டப் பெயர் உண்டு. இந்தப் பாண்டியன், அந்தக் காலத்தில் பல்லவ இராச்சியத்தோடு இணைந்திருந்த சோழ நாட்டின்மேல் படை யெடுத்துச் சென்று போர் புரிந்தான். சோழ நாட்டிலே வேம்பில் என்னும் ஊர்க்கோட்டையை முற்றுகையிட்டுக் கைப்பற்றினான். பிறகு, நியமம் என்னும் ஊரில் தங்கியிருந்த போது, திருச்சிராப்பள்ளியில் மலையின் மத்தியில் உள்ள குகைக்கோயிலுக்கு 125 கழஞ்சு பொன்னைத் தானஞ் செய்தான். திருச்சிராப்பள்ளிக் குகைக்கோயில் மகேந்திரவர்மன் என்னும் பல்லவ அரசனால் அமைக்கப்பட்டது. அந்தக் குகைக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானுக்கே, வரகு ண பாண்டியன் மேற் சொன்னபடி 125 கழஞ்சு பொன்னைத் தானம் செய்தான். அந்தப் பொன்னின் வட்டியைக்கொண்டு நாள் ஒன்றுக்கு நான்கு திருவிளக்குகளை ஏற்றும்படி அவன் கட்டளை யிட்டிருந்தான். அந்தப் பொன்னைச் சிற்றம்பர் என்னும் நகரத்தார் பெற்றுக்கொண்டு, நாள் தோறும் திருக்கோயிலில் நந்தாவிளக்கு எரிக்கப் பொறுப்பேற்றுக் கொண்டனர். அந்தச் சாசனத்தின் வாசகப் பகுதி இது:

66

“கோமாறஞ் சடையற்கு யாண்டு நான்கு

நான் ஈராயிரத்தைந்

நூற்றுஒன்று

வேம்பில் மதிள் அழித்துப்

போந்து நியமத்திருந்தருளிச் சோமசூர்யான்வயத் துவய

திலகாலங்கார ராயின

  • திருக்கோயில் : அக்டோபர், 1968.