உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

245

அதன் பிறகு, பகைவர் இறுமாப்பை அழித்த சிம்ம வர்மன் தோன்றினான். இவனுக்கு உலகம் முழுவதும் வெற்றிப் புகழ்படைத்த வீரனாகிய சிம்மவிஷ்ணு பிறந்தான். இவன், நெல் வயல்களையும் அழகான கமுகஞ் சோலைகளையும் அணிகலனாக அணிந்த கவீரனு டைய மகளால் (காவிரி ஆற்றினால்) அழகு பெற்ற சோழர்களின் சோழ நாட்டைக் கைப்பற்றினான்.

இவன் மகனாகிய மகேந்திரனுக்கு, உபேந்திரன் (திருமால்) போன்று புகழ் பெற்றவனும், பல பகைவர்களை வென்று வாதாபி நகரின் நடுவில் நின்ற அவர்களுடைய வெற்றிக் கம்பத்தை எடுத்துக் கொண்டவனுமாகிய நரசிம்மவர்மன் (I) பிறந்தான்.

-

இவனுக்குப் பரமேசுவரன் (I) பிறந்தான். இவன் பகைவர் களுடைய இறுமாப்பை அழித்து, சளுக்கிய அரசனுடைய சேனை யாகிய இருளை ஓட்டும் சூரியனைப் போன்று விளக்கினான்.

இவனுடைய மகன் நரசிங்க வர்மன் (II) மகேந்திரனுக்கு ஒப்பான இவன், இரு பிறப்பாளருக்குக் கடிகையையமைத்து, சந்திரசேகர னுக்கு (சிவபெருமானுக்கு)க் கயிலாய மலைக்கு ஒத்ததாகக் கற்றளியை அமைத்தான்.

இவன் மகன், அரசர்களால் வணங்கப்பட்ட பரமேசுவரன் (II) என்பவன். கலியாகிய இருளைப் போக்கிய இவன் மனு முறைப்படி அரசாண்டான்.

இவனுக்குப் பிறகு பழைய மன்னர்களின் நற்குணங்கள் யாவும் பொருந்திய நந்திவர்மன் (II) தோன்றி, நான்கு கடற்பரப்பையும் ஆடையாக வுடுத்த பூமியையும் (பல்லவ) அரசகுடும்பத்தின் வளமையையும் கைக்கொண்டான்.

சேனா சமுத்திரத்தை உடையவனும், பல நற்குணங்களாகிய இரத்தினங்களுக்கு உறைவிடமான கடல் போன்றவனும் ஆகிய இவனுக்கு, உயர்ந்த மலையிலிருந்து ரேவா (நருமதை) என்னும் ஆறு தோன்றியது போல, பெரிய அரச குடும்பத்தில் பிறந்த ரேவா என்பவவள் அரசியாக வாய்ந்தாள்.

இவ்வரசிக்கு இவ்வுலகத்திலே மகனாகப் பிறந்தவன். புகழ் வாய்ந்த நந்திவர்மன் என்னும் அரசன். இவன் உலகத்தால் (மக்களால்) விரும்பப்பெற்று, மூன்று உலகத்தையும் காப்பதே தன் நோக்கமாகக்