உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

தாமரை போன்ற கொப்பூழையுடையவரின் (திருமாலின்) நாபித்தாமரையில் இருந்து நான்முகன் தோன்றினான். அவனிட மிருந்து ஆங்கீரசன் தோன்றினான். அவனிடமிருந்து தேவகுரு பிரகஸ்பதி தோன்றினான். அவனிடமிருந்து சம்யூ தோன்றினான். அவனிட மிருந்து சம்யவன் (பாரத்துவாஜன்) தோன்றினான். அவனிடமிருந்து துரோணன் தோன்றினான். அவனிடமிருந்து, காமனை எரித்த சிவ சத்தாக உள்ள துரௌணி (அசுவத் தாமன்) தோன்றினான். அம்முறையே, அவனிடமிருந்து மிக்க புகழுடைய வனும் உலக முழுவதுக்கும் அதிபதியும் ஆகிய பல்லவன் தோன்றினான்.

அவனிடமிருந்து பல்லவ அரசர் பரம்பரை உண்டாயிற்று. பூமியைத் தாக்குவதனாலே களைத்துப்போன ஆதிசேஷனுடைய களைப்பைப் பல்லவ அரசர் தங்களுடைய தோள்வலியினாலே போக்கி, காத்தல் தொழிலினாலே குடி ஜனங்களின் சிறு துன்பத்தையும் களைந்து உலகத்தைக் காப்பாற்றினான்.

இந்தப் பரம்பரையிலே, அசோகவர்மன் முதலான மன்னர்கள் தெய்வமான பின் (இறந்த பிறகு) பல்லவகுல சூளாமணியான், இந்திரையின் (இலக்குமியின்) கணவன் (திருமால்) போன்று காளபர்த்ரி தோன்றினான்.

இவனுடைய

மகனான சூதபல்லவனுக்குப் புகழ்பெற்ற வீரகூர்ச்சன் தோன்றினான். இவன், நாகர்குல அரசனுடைய மகளை மணந்துக் கொண்டு நாக மன்னனுடைய அரசு உரிமைகளையும் பெற்றான்.

இவனுக்கு, இக்குலத்துக்கு ஓர் சந்திரன் போல ஸ்கந்த சிஷ்யன் பிறந்தான். இவன் சத்தியசேனனிடமிருந்து இரு பிறப்பாளரின் (பிராமணரின்) கடிகையைப் கைப்பற்றினான்.

ரு

இவனிடமிருந்து குமாரவிஷ்ணு தோன்றி, காஞ்சீ நகரத்தைக் கைப்பற்றிப் போர்களில் வெற்றியடைந்தான். பிறகு, கடல் போன்ற சேனைகளையுடைய சோழர்களுக்கு வடவாமுகாக்கினி போன்று புத்தவர்மன் தோன்றினான்.

இவனுக்கு பிறகு விஷ்ணுகோபன் முதலிய அனேக அரசர்கள் அரசாண்டு கழிந்த பிறகு, நந்திவர்மன் (I) பிறந்து பினாகபாணியின் (சிவபெருமானின்) அருளினாலே திருஷ்டி விஷம் உடைய ஆற்றல் மிக்க பாம்பை ஆட்டிவைத்தான்.