உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

289

கற்றளி என்றும் பெயர் ஒற்றுமை ஒன்றை மட்டும் கொண்டு முடிவு கட்டிவிட்டார்கள். பூதிவிக்கிரம கேசரி வேளிர் குலத்தவன் என்பதும் யதுவம்சத்தவன் (யாதவவம்சத்தவன்) என்றும் கொடும்பாளூர்ச் சாசனம் கூறுகிறது. பெயர் ஒற்றுமை மட்டும் ஆதாரமாகக் கொண்டு ஆராயும் இவர்கள், யதுவம்சத்து பூதிவிக்கிரம கேசரி மறவவம்சத்தைச் சேர்ந்தவன் என்றும் தீர்மானம் செய்துவிட்டார்கள் இதுமட்டுமா?

10

9

இன்னொரு சாசனம் செம்பியன் இருக்குவேள் என்பவரையும் அவர் மனைவி வரகுணை என்பவரையும் கூறுகிறது. பூதிவிக்கிரம கேசரியின் மற்றொரு மனைவியின் பெயர் வரகுணை யாகையினாலே, இந்தச் சாசனத்தில் கூறப்படும் வரகுணை, பூதிவிக்கிரம கேசரியின் மனைவிதான் என்று பெயர் ஒற்றுமை ஒன்றுமட்டும் சான்றாகக் கொண்டு, பூதிவிக்கிரம கேசரிக்கு செம்பியன் இருக்குவேள் என்னும் பெயரும் உண்டு என்று யூகித்துக் கொண்டு அதையே முடிவுகட்டி விட்டார்கள்.

வேறு இரண்டு சாசனங்கள்" மதுராந்தக இருக்குவேளான ஆதித்தன் விக்ரம கேசரி என்பவன் பெயரைக் கூறுகின்றன.இப் பெயரில் விக்ரம கேசரி என்று இருப்பதனாலே, இந்த ஆளும் பூதிவிக்ரம கேசரியே என்று முடிவு கட்டிவிட்டார்கள். இவ்வாறு பெயர் ஒற்றுமை மட்டும் இவர்களுக்குச் சான்றாக உள்ளன!

வரகுணை, கற்றளி என்னும் பெயர் உள்ள பெண்கள் எல்லாரும் பூதிவிக்ரம கேசரியின் மனைவியராகத்தான் இருக்க வேண்டுமோ? வரகுணை, கற்றளி என்னும் பெயர்கள் வேறு பெண்களுக்குச் சூட்டப்படவில்லையா? பூதி என்னும் பெயரும், விக்ரம கேசரி என்னும் பெயரும் வேறு எவருக்கும் உரியனவன்றோ? கொடும்பாளூர்ச் சாசனத் தன லவனாகிய பூதிவிக்ரம கேசரிக்கு மட்டுந்தான் இப்பெயர்கள் உரியனவோ? இவ்வாறு சாசனங்களில் காணப்படுகிற இப்பெயர்களை யெல்லாம் ஒருவரைத்தான் குறிப்பிடுகின்றன என்று முடிபோடுவது என்ன ஆராய்ச்சியோ? இந்த ஆராய்ச்சியை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

முக்கியமாக இரண்டு செய்திகளைக் கவனிக்கவேண்டும்? விக்ரம கேசரியின் இரண்டாம் பாட்டனான நிரூபகேசரி இளமைப் பருவத்தில் பாம்புகளோடு வளர்ந்தான் என்று சாசனம் கூறுகிறது. இந்தச் செய்தியைச் சரித்திரக்காரர்கள் எல்லோரும் இதுவரையில்