உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"

அடிமை வாழ்வு*

அடிமை வாழ்க்கை இரண்டு விதம். ஒன்று தனிப்பட்ட மனிதன், தனிப்பட்ட மற்றொருவனுக்கு அடிமைப்படுவது; மற்றொன்று, ஒரு அரசாட்சிக்கு மற்றொரு நாடு அடிமைப்படுவது. இந்தக் காலத்தில் மனிதனுக்கு மனிதன் அடிமைப் படுவது சட்டப்படி செல்லாது. ஆனால் ஒரு அன்னிய ஆட்சியின் கீழ் இன்னொரு நாடு அரசியல் அடிமையாக இருப்பதை இன்றும் காண்கிறோம். சமீபகாலத்தில் பல நாடுகள், குறிப்பாகக் கிழக்கு தேசத்து நாடுகள், அயல் நாட்டு ஆட்சியினின்று விடுதலைப் பெற்றுள்ளன. அன்னிய ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற பல நாடுகள், இப்போது அன்னிய நாடுகளுக்குப் பொருளாதார அடிமை நாடுகளாகிக் கொண்டு வருகின்றன. அதாவது அரசியல் விடுதலைப் பெற்றுப் பொருளாதாரத்தில் அடிமைப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நாம் இங்கு எழுதப் புகுந்தது அரசியல் அடிமைத்தனத்தைப்பற்றியும் அல்ல; பொருளாதார அடிமைத்தனத்தைப்பற்றியும் அல்ல. தனி மனிதன் தனி மனிதனுக்கு ஆட்பட்டு அடிமைலாழ்வு வாழ்ந்த பழஞ்செய்தியைப்பற்றித்தான் இங்கு நாம் ஆராய்வது.

எகிப்து, கிரேக்கம். உரோமாபுரி முதலிய பழைய நாகரிக நாடுகளில் அடிமைகள் இருந்தார்கள் என்பதைச் சரித்திரத்தில் படிக்கிறோம். இடைக் காலத்திலும் உலகம் முழுவதிலும் அடிமைகள் இருந்ததையும், ஆடு மாடுகளைப் போல் மனிதர்கள் விற்கப் பட்டதையும் பற்றிப் படிக்கிறோம். ஆனால் பாரத தேசத்திலும் தமிழ் நாட்டிலும் மனித அடிமைகள் இருந்தார்கள் என்பதே நம்மவரில் பெரும்பாலருக்குத் தெரியாது. பாரததேசத்தில் ஆதிமூலம் அடிமைகளே கிடையாது என்று எண்ணிக்கொண்டிருப்பவர் பலர் ருக்கிறார்கள். ஏன்? இந்திய சரித்திரம் எழுதியவர்கள் கூட, இந்தியாவில் பண்டைக்காலத்தில் மனித அடிமைகள் இருந்தார்கள் என்பது பற்றி எழுதவே இல்லை.

  • 15600TLIGOT: LOVIT 8, 1958.