உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

தமிழ் இலக்கியவரலாறு கிறித்தவமும் தமிழும்

1936 ஆம் ஆண்டில் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் எழுதிய முதல் நூல் கிறித்தவமும் தமிழும் எனும் இந்நூலாகும். கிறித்தவரால் தமிழ்மொழிக்கு உண்டான நன்மைகளைக் கூறும் நூல்’ என்பது இந்நூலுக்கு இவர் கொடுத்துள்ள துணைத் தலைப்பு ஆகும். ஐரோப்பியர்கள் வருகையோடு கிறித்துவம் தமிழ்நாட்டில் எவ்வகையான பண்பாட்டுத் தாக்கங்களை உருவாக்கியது என்பதே இந்நூலின் பாடுபொருளாக அமைகிறது. தமிழ்ச்சூழலில் செய்யுள் மரபே பெரும் வழக்காக இருந்தபோது அம்மரபிற்கு இணையான உரைநடை வடிவத்தை காலனிய செல்வாக்கே நமக்கு உருவாக்கியது. இதில் கிறித்துவ பாதிரியார்களின் பங்களிப்பு முதன்மையானது. இத்தன்மை குறித்து விரிவான பதிவை இந்நூலில் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் செய்துள்ளார்கள். செய்யுள் நடையில் எழுதப்படும் நூல்கள் ஒருசிலரால் மட்டுமே வாசிக்கப்படும் சூழல் இருந்தது. ஆனால் உரை நடையில் எழுதப்படும் நூல்களைப் பரவலாக எழுத்தறிவு பெற்றவர்கள் அனைவரும் வாசிக்கமுடிந்தது. இத்தன்மை கிறித்துவ பாதிரியார்களால் எவ்வகையில் பரவலாக்கப்பட்டது என்பதை மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஓலைச்சுவடியில் இருந்த நமது நூல்கள் அச்சுவடிவம் பெற்றதன் வரலாற்றையும் அதன்மூலம் ஏற்பட்ட தாக்கங்களையும் இந்நூலில்