உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு

கிறித்துவமும் தமிழும்

3

47

உடும்.

சபைப் பாதிரிமாரால் எழுதி அச்சிடப்பட்ட இந்த முதல் உரைநடை நூல் இப்போது இந்தியாவில் இல்லை என்று தெரிகிறது. ஒருவேளை ஐரோப்பாக் கண்டத்தில் உள்ள புத்தகசாலைகளிற் கிடைக்கக்கூ இந்த நூலை யார் இயற்றினார் என்பது தெரியவில்லை. சவேரியார் என்னும் செய்ன்ட் ஸேவியர் எழுதினார் என்று சிலர் சொல்லுகிறார்கள். இது தவறு. ஏனென்றால், சவேரியாருக்குத் தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது. ஆகையால், இந்த முதல் தமிழ் உரைநடை நூலை அவர் இயற்றியிருக்க முடியாது. இந்த நூல் அச்சிட்ட பிறகு, 1579-இல் “கிறித்தவ வணக்கம்”” என்னும் நூல் அச்சிடப்பட்டது. இந்த உரைநடை நூலை எழுதியவர் ஆன்றிக் என்னும் ஏசுவின் சபையைச் சேர்ந்த பாதிரியார் என்று தெரிகிறதேயன்றி, அவரைப்பற்றிய வேறு வரலாறு ஒன்றும் தெரியவில்லை. இந்த நூலும் நமது தேசத்தில் இப்போது கிடைக்கவில்லை. பாரிஸ் நகரப் புத்தக சாலையில் இந்தப் புத்தகத்தின் பிரதியொன்று இருப்பதாக உறுதியாகத் தெரிகிறது. 19-ஆம் நூற்றாண்டில், மேற்சொன்ன இரண்டு நூல்களைத் தவிர, ஏசுவின் சபையைச்சேர்ந்த ஐரோப்பியப் பாதிரிமார் தமிழ் கற்பதற்காகச் சில நூல்கள் அச்சிடப் பட்டனவாகத் தெரிகின்றன. ஆனால், அந் நூல்களைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. தமிழில் முதல் உரைநடை நூல் உண்டானது 1577-இல் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.

16-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு, மேலே சொல்லியபடி 17-ஆம் நூற்றாண்டில், ராபட் நொபிலி என்னும் தத்துவ போதக சுவாமி சில உரைநடை நூல்களை எழுதினார். இந்த நூற்றாண்டில் இவரைத் தவிர, அருளானந்தர் என்னும் பெயருள்ள ஜான்-டி-பிரிட்டோ பாதிரியார் சில உரைநடை நூல்களைத் தமிழில் எழுதியிருப்பதாகத் தெரிகிறது. ஆனால் அருளானந்தசுவாமி எழுதிய நூல்கள் எமக்கு இதுவரை கிடைக்கவில்லை. தத்துவ போதக சுவாமி இயற்றிய நூல்களைப் பற்றி மற்றோரிடத்தில் அவர் வரலாற்றிற் கூறியுள்ளோம்.

அதன் பிறகு,18-ஆம் நூற்றாண்டில், பெஸ்கி என்னும் வீரமாமுனிவர் சில உரைநடை நூல்களை இயற்றியிருக்கிறார். இவர் காலத்திலே, தஞ்சைக் கடுத்த தரங்கம் பாடியில் வாழ்ந்திருந்த சீகன் பால்கு முதலான செர்மனி தேசத்துப் பாதிரிமார்களும் சில உரைநடை நூல்களை இயற்றியிருக்கின்றனர். இதே நூற்றாண்டில் தான் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த மாதவச் சிவஞான சுவாமியும் சில உரைநடை நூல்களை இயற்றினார். சிவஞான சுவாமியின்