உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு

கிறித்துவமும் தமிழும்

59

பறங்கியர் காலத்தில் ஏசுவின் சபைப் பாதிரிகளின் மேற் பார்வையில், தென் இந்தியாவில் கீழ்க்கண்ட இடங்களில் அச்சுப் பொறிகள் நிறுவப்பட்டன. இவைதாம் முதன்முதல் இந்தியாவில் நிறுவப்பட்ட அச்சுப் பொறிகள்.

மலையாள தேசத்தில் அம்பலக்காடு என்னும் இடத்தில் 1550-இல் ஒரு அச்சுப் பொறி நிறுவப்பட்டது.

திருநெல்வேலியைச் சேர்ந்த புன்னைக் காயல் என்னும் டத்தில், 1578-இல், ஏசுவின் சபைப் பாதிரிமார் தமிழ் கற்பதற்காக ஒரு கல்லூரி நிறுவப்பட்டது. இக் கல்லூரியின் தலைமை ஆசிரியராக விருந்தவர் என்ரீகெஸ்" என்பவர். இந்தக் கல்லூரியின் மேற்பார்வையில் மேற்படி ஆண்டில் ஒரு அச்சுப் பொறி அமைக்கப்பட்டது. வாரீயா16 என்பவர் இங்கு அச்சு எழுத்துக்களை உண்டாக்கிச் சில தமிழ்ப் புத்தகங்களை அச்சிற் பதிப்பித்தார். இங்கு அச்சிடப்பட்ட புத்தகங்கள் இன்னவை என்று தெரியவில்லை. இவர் உண்டாக்கிய அச்சு எழுத்து மர அச்செழுத்தாக இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. 1578-இல் “கிறித்துவ வேதோபதேசம்”, “கிறித்துவ வணக்கம்” என்னும் புத்தகங்கள் இவ்விடத்தில் அச்சிடப்பட்டன என்று சொல்லப் படுகின்றன.

கொச்சியில், 1577-இல் ஏசுவின் சபைப் பாதிரிமார் ஒரு அச்சுப் பொறி நிறுவினார்கள். அங்கு அச்சிடப் பட்ட தமிழ்ப் புத்தகங்களின் விவரம் தெரியவில்லை.

கோவாப் பட்டினத்தில், 1550-இல், போர்ச்சுகல் தேசத்திலிருந்து இரண்டு அச்சுப் பொறிகள் வந்தனவாகத் தெரிகின்றன. ஆனால், வை உபயோகப்படுத்தப்படாமலே யிருந்தன. யாம் அறிந்த வரையில், 1557-இல் தான் முதன் முதல் கோவாப்பட்டினத்தில் புத்தகம் அச்சிடப்பட்டது. ஆனால், அப்புத்தகம் தமிழ்மொழியில் அச்சிடப் பட்டதன்று. இங்குத் தமிழ் புத்தகங்கள் எப்போதாவது அச்சிடப் பட்டனவா என்பதும் தெரியவில்லை.

மலையாள தேசத்தில் சேந்த மங்கலத்தைச் சேர்ந்த அறுப்புக் கோட்டை என்னும் இடத்தில், 1557-இல் ஒரு தேவாலயமும், பாதிரி களின் மடமும், ஒரு அச்சுப் பொறியும் நிறுவப்பட்டன. கொச்சியிலும் இதே ஆண்டில்தான் அச்சுப்பொறி நிறுவப்பட்டது. இவ்விடத்தில்