உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. விஞ்ஞான நூல் வரலாறு

"

ஐரோப்பியரின் தொடர்பினால் தமிழ்மொழியில் உரைநடை நூல்களும் அச்சுப்புத்தகங்களும் ஏற்பட்டது போலவே, மற்றொரு வகை நூலும் உண்டாயிருக்கிறது. அதுதான் விஞ்ஞானநூல். நாம் விஞ்ஞான நூல் என்று சொல்லுவது பூகோள நூல், வான நூல், பிராணி நூல், க்ஷேத்திரக் கணிதம், தேசசரித்திரம், உடல் நூல் முதலியவை களையே. ஐரோப்பியர் வருவதற்கு முன்னே இந்த விஞ்ஞான நூல்கள் (வான நூலைத் தவிர) தமிழ் மொழியிலும் ஏனைய இந்திய மொழிகளிலும் இருந்தனவில்லை. எவையேனும் இருந்தனவென்றால். அ வை உண்மைக்கு மாறான கற்பனைக் கதைகளாகத்தான் இருந்திருக்கக்கூடும். பால், தயிர், நெய், கருப்பஞ்சாறு முதலான எழுவகைப் பொருள்களால் நிரம்பப்பெற்ற ஏழுகடல்கள் இருக்கின்றன என்பதும், சகரனுடைய பிள்ளைகள் தோண்டியபடியால் சாகரம் (கடல்) உண்டாயிற்றென்பதும், மலைகள் பண்டைக் காலத்திற் சிறகுகளைப் பெற்று ஆகாயத்தில் இங்கும் அங்கும் விருப்பம்போல் பறந்து திரிந்து கொண்டிருந்தபோது அவற்றின் சிறகுகளை இந்திரன் வெட்டி வீழ்த்தியபடியால் அவை பறக்கமுடியாமல் பூமியிலே விழுந்து நகர முடியாமல் அங்கங்கே கிடக்கின்றன என்பதும், பூமியைப் பாய்போல் சுருட்டிக் கொண்டுபோய் ஓர் அசுரன் கடலுக்குள் ஒளித்து வைத்தான் என்பதும், இவை போன்ற கற்பனைக் கதைகளுமே நம்முடைய பண்டைப் பூகோள நூல்கள். பூமியைச் சூரியன் சுற்றி வருகிற தென்பதும், இராகு கேது என்னும் பாம்புகள் சூரிய சந்திரர்களை ஒரு பகை காரணமாக விழுங்குவதால் சூரிய சந்திர கிரணங்கள் உண்டாகின்றன என்பதும், தக்கனுடைய சாபத்தினால் சந்திரன் தேய்வதும் சிவனுடைய அருளினால் அது வளர்வதும் நேரிடுகிற தென்பதும், இவை போன்றவைகளுமே நமது பண்டைக்கால வான சாத்திரங்கள். மேகம் கடலில் மேய்ந்து தண்ணீரைக் குடித்து வானத்திற் சென்று மழையாகப் பெய்கிற தென்பதும், இந்திரனுடைய கோபத் தினால் இடி மின்னல்கள் உண்டாகின்றன என்பதும், இவை போன்ற