உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு

கிறித்துவமும் தமிழும்

97

இனி, வீரமாமுனிவரின் செந்தமிழ் வசனநடையின் மாதிரியைக் கீழே தருகிறோம். இஃது, அவரியற்றிய “தொன்னூல் விளக்கத்”தின் பொருளதிகாரத்தில், அறம் என்னும் பொருள்பற்றி எழுதப் பட்டதாகும்:-

66

“வேதநூன் முதலெவ்வகை நூலுங் கல்லாதுணரவுஞ் சொல் லாதுணர்த்தவும் வல்லவராகி, மெஞ்ஞானத் திருக்கடலாகிய வொரு மெய்க்கட வுடன் றிருவடிமலரே, தலைக்கணியெனக் கொண்டேத்தி, இருளிராவிடத்து விளங்கியவொரு மீன் போலவும், பாலைச்சுரத்தரி தலர்ந்த பதுமம் போலவும் மெய்யாஞ்சுருதி விளக்கா திருளே மொய்த்த நாட்டின் கண்ணுங் கடவுளேற்றிய ஞானத் திருவிளக் கெரிப்பத் தெளிந்து உணர்ந்தெங்கும் ஒரு விளக்கென நின்றுயர்ந்த திருவள்ளுவருரைத்த பலவற்றொன்றை நான் தெரிந்துரைப்பத் துணிந்தேன். அந்நாயனார் பயனெனும் பெருங்கடலாழத்தின் மூழ்கியாங் குடையருமணி யொருங்கெடுத் தொருசிறு செப்பின டைத்தாற்போலத் திருவள்ளுவரது பயனெல்லாம் விரித்துப் பகரும்படி நான் வல்லனல்லே னாகையின், அக்கடற்றுரை சேர்ந்தொரு மணியெடுத்துக் காட்டலுணர்ந்தேன். அவர் சொன்ன குறளினொன்றே யிங்ஙன நான் விரித்துரைப்பத்துணிந்தேன். அஃதாவது,

"மனத்துக்கண் மாசில னாத லனைத்தற னாகுல நீர பிற”

எ-

T-து. இல்லறந் துறவறமென்ற இவ்விரண்டினுள்ளும் அடங்கி நிற்கு மெல்லாவறங்களும் மனத்தின் தூய்மையாற்பெறும் பெருமையே தருமமெனவும், மனத்தினுண் மாசுகொண்டவன் செய்யுந் தவமுந் தானமு மற்றை யாவுமறத்தின ரவமாவதன்றி யறத்தின் பயனுள வல்லவெனவு மக்குறளிரு பயனிவை யென விரித்துக்காட்டுதும். விரிப்பவே மெய்யும் பொய்யும் விளக்கியுட் பயன்றரு மெய்யறத்தின் நன்மையே வெளியா யிஃதொன்றுணர்ந்து நாமதற்கொப்ப நடந்தாலிது வீடெய்தும் வழியெனக் காணப்படும். பெரும்பொரு ணேர்ந்து பொய்ம்மணி கொள்வது கேடாயினும் பொருளை நேர்ந்தும் உடலினை வாட்டியும் உயிரை வருத்தியு மேற்கதி வீட்டிற் செல்லாச் சில பொய்யறங்களை யீட்டுவதிலுங் கேடாமன்றோ? இதனை விலக்கித் தனதுயிராக்கங் காப்பது வேண்டி யிக்குறட் பயனாராய்வது நன்றே.”