உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு

கிறித்துவமும் தமிழும்

99

மாளிகை யருந்தொழிற் றச்சர் வழுவற முடிப்பினு முள்ளாளரசன் கொடுங் கோலோச்சுங் குரூரனாயி லுலகிலாய வொருபயனுண்டோ? அவ்வாறொருவன் அருமறை யோதினும் அரும்பொருட்கலைநூ லளவறக் கற்கினும் பல நதியாடினும் பலதலஞ் சேரினும் வரைவில கொடுப்பினும் வழுவில நடப்பினும் கோயின் மண்டபங்குளமுதற் பற்பல வாயிற் றருமென வுவந் தியற்றினுந் திரட்பொருளீட்டிய செல்வந் துறப்பினும் மனை நகர் நாடு மகார் மனைசுற்றமுந் துறந்தரு வனத்திடை துனையறவுறையினு மின்புறு சுவை சுகமெல்லா மறுத்தே யைம்பொறி கொன்றுட லழிய நோற்பினு மீரற வழியெலா நேரச் செல்லினு மனத்தூடிய வினைமா சுளனாயிற் றனக்கொரு பயனுந் தராதென வுணர்க.....

وو

வீரமாமுனிவர், பாமரர் படிக்கும்பொருட்டு எழுதிய சாமானிய வசனநடையின் மாதிரியைக் கீழே தருகிறோம். இப்பகுதி, அவர் எழுதிய “பரமார்த்த குருவின் கதை” யிலிருந்து எடுக்கப்பட்டது.

ஏழாவது : குதிரையிலிருந்து விழுந்த கதை

“சொன்ன வெச்சரிக்கையோடு நெடுநாளிருந்த பின்பு சீர்மை வழிபோனாற் சீஷர்கள் கையிற் பணம் பறியுமொழிய மடத்திலது வரவறியாதென்றதைப் பற்றி யூருக்கூர் சுற்றித் திரியப் புறப்பட்டார்கள்.

66

ஒருநாளவர்கள் மடத்துக்குத் திரும்பி வருகையி லசைந் தசைந்து குருக்கள் குதிரைமேல் வரும்போது கீழே தொங்கின வொரு மரக் கொப்புப்படவே யவர் தலைப்பாகை பிறகே விழுந்ததாம். அதனைச் சீஷர்களெடுத்தார்களென் றெண்ணி சும்மாவனேகந்தூர மவர் சென்ற பின்பு தலைப்பாகெங்கே தாருங்கோளென்று கேட்டார். அதங்கே விழுந்த விடத்திற் கிடக்குமென்றவர்கள் சொல்ல வவர் கோபித்து விழுந்ததெல்லா மெடுக்கத் தேவையில்லையோ! நான் சொல்லவேணுமோ வென்றார். அப்படியே யுடனே மடைய னோடிப்போய் விழுந்தபா கெடுத்துக் கொண்டு

வருகையி லன்றிராத்திரி மழை சொரிந்து பெய்ததினாலே பசும்புற் காட்டிலே மேய்ந்திருந்த குதிரை கழிந்து விட்டலெத்தியைத் தலைப்பாகி லேந்திக் குருவின் கையில் வைத்தான்.'

66

அப்போதவர் சீச்சீயென்று வெகுவாய்ச் சினந்தார். அதுக் கெல்லாருங் கூடியிதேதையா விழுந்த சகலமு மெடுக்கச் சொல்லி முன் கற்பித்த தல்லவோ. கற்பித்தபடி செய்ததினா லிப்போநீர் கோபங் காட்டுவானே னென்றார்கள். குருவோ வென்றா லப்படி யன்றே;