உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-17

1714-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், இவர் தமது உடல்நலத்தைப் பேணிக்கொள்வதற்காக ஐரோப்பாவுக்குப் புறப்பட்டார். ஐரோப்பா சென்று திரும்புவதற்குள் தமிழ் மொழியை மறந்துவிடக்கூடுமே என்று அஞ்சி, தமிழைப் பேசிப் பழகிக் கொண்டிருப்பதற்காக மலையப்பர் என்னும் தமிழரைத் தம்முடன் அழைத்துக் கொண்டு போனார். ஐரோப்பா சென்றதும் டென்மார்க்கு தேசத்தரசனைக் கண்டு, தரங்கம்பாடியில் நடை பெறும் சமய ஊழிய விவரங்களை அவனுக்குத் தெரிவித்தார். அவ்வரசன் இவரது ஊழியத்தை மெச்சிப் புகழ்ந்து, இவரைத் தரங்கம்பாடி மிசனுக்குத் தலைவராக்கியதோடு, இன்னும் சில மதபோதகரை அனுப்பியும், பொருளுதவி செய்தும் ஊக்கப்படுத்தினான். இவர் ஐரோப்பாவில் இருக்கும்போது ஹாலி' நகரத்தில் தமிழ்-லத்தீன் அகராதியின் சில பகுதிகளையும் அச்சிற் பதிப்பித்தார். பிறகு, தமது சொந்தஊர் சென்று அங்கு டொரெதியா ஹால்ஸ்மான் என்னும் மங்கையை மணஞ் செய்துகொண்டார். பிறகு தம் மனைவியுடன் இங்கிலாந்து சென்றார். அங்குள்ள “கிறித்துவ அறிவு விளக்கச் சபையார்" இவர் தமிழ்நாட்டிற் செய்துள்ள சமய ஊழியத்தைப் பாராட்டி, இலத்தீன்மொழியில் ஒரு வரவேற்புத்தாள் படித்துக் கொடுத்தனர். இவர் அதற்கு முதலில் இலத்தீன்மொழியிலும் பின்னர்த் தமிழ்மொழியிலும் பதிலளித்தார். தமிழ் நாட்டின் சார்பாகப் பதிலளித்தபடியால் தமிழில் பேசினார் போலும். பிறகு, இங்கிலாந்திலிருந்து புறப்பட்டு, 1716-ம் ஆண்டு கஸ்டு மாதம் 9-ஆம் நாள் மீண்டும் தமிழ்நாடு வந்த சேர்ந்தார். தமிழ்நாடு வந்தபிறகு பல ஆண்டு அவர் வாழ்ந்திருக்க வில்லை. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நோய்வாய்ப்பட்டுக் கடைசியாக 1719- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23-ஆம் நாள் தரங்கம்பாடியிற் காலமானார்.

இவர் தமிழ்மொழிக்குச் செய்த சிறந்ததொண்டு என்ன வென்றால், தமிழ்நாட்டுப் பொதுமக்களின் உபயோகத்திற்காகத் தமிழ்ப் புத்தகங்களை அச்சிட்டு உதவியது தான். அக்காலத்தில் அச்சுப் புத்தகம் கிடையாதபடியால், எல்லோரும் ஓலைச் சுவடிகளைப் படித்து ஓ வந்தனர். ஸீகன்பால்கு ஐயரும் தாம் தமிழ் படித்தபோது ஓலைச் சுவடிகளையே படிக்கவேண்டியிருந்தது. ஏட்டுச்சுவடிகளைப் படிப்பது அச்சுப் புத்தகத்தைப் படிப்பதுபோல எளிதான காரியமன்று. ஏட்டுச்