உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -17

இதில், நேரிழையார் கூந்தல் என்பது ஓதி. (ஓதி = கூந்தல்). ஓதி என்னும் சொல்லின் ஒரு மாத்திரை சுருக்கினால், (ஒரு புள்ளி வைத்தால்) ஒதி என்றாய் ஒதிமரம் என்று பொருள்படும். ஒதி மரம் என்பது மரங்களில் ஒரு வகை.

நீண்மரத்தி லொன்றேற நேரிழையார் கூந்தலாம்

பூநெருப்பி லொன்றேறப் பூங்குளமாம்-பேணுங் கழுத்திலொன் றேற இசையா மிசையின் எழுத்திலொன் றேறவாங் காடு.

இச் செய்யுள், அணியியலுள் மாத்திரை வர்த்தனம் என்னும் சொல்லணிக்கு உதாரணமாகக் கூறப்படுகிறது.

இதில் நீள்மரம் என்றது ஒதி மரத்தை. ஒதி என்பதில் ஒகரம் ஒரு மாத்திரை அதிகம் பெற்றால் (புள்ளியை எடுத்துவிட்டால்) ஓதி என்றாகி கூந்தல் என்று பொருள்படும். பூ நெருப்பு என்பது எரி. எரி என்பதில், பழைய இலக்கணப்படி எகரத்தின்மேல் இருக்க வேண்டிய புள்ளியை எடுத்துவிட்டால் எகரம் நீண்டு ஏகாரமாக ஏரி என்றாகும். இது நிற்க.

சென்ற நூற்றாண்டிலே புதிய வழக்கம் ஒன்று இருந்ததாகத் தெரிகிறது. அதாவது.

தொல்லைவடிவின வெல்லா வெழுத்து மாண் டெய்து மெகர மொகரமெய் புள்ளி

என்னும் சூத்திரப்படி எகர ஒகரக் குற்றெழுத்துக்கள் புள்ளி பெற்றிருந்ததை நீக்கி, அதற்கு மாறாக ஏகார ஓகாரங்களுக்குப் புள்ளி கொடுத்து எழுதினார்கள். இந்த வழக்கத்தைக்கண்ட இயற்ற மிழாசிரியர் இராமாநுச கவிராயர் அவர்கள், தாம் நன்னூலுக்கு எழுதி வெளியிட்ட இராமநுச காண்டிகை யுரையில், மேற்படி சூத்திரத்தை மாற்றி அமைத்து அதற்கேற்ப உரையும் எழுதி விட்டார். அது வருமாறு:-

'தொல்லை வடிவின வெல்லா வெழுத்துமாண் டெய்து மேகார மோகார மெய்புள்ளி'

இது, நிறுத்த முறையே உருவிலக்கணமுணர்த்துகின்றது. (இ-ள்.) எல்லா வெழுத்துந் தொல்லை வடிவின=எல்லா எழுத்துக்களும் பல்வேறு வகைப்பட எழுதி வழங்கும் பழைய வடிவையே