உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

பானலெல்லாம் பாடும் துறை.

கொங்கைக்குந் தூய குலவளைசேர் கோகனகச் செங்கைக்கு மென்னவிலை செப்புவோம்-மங்கை தெரியா மருங்குலுக்குத் தேசம்விலை யென்னத் தரியார் மலைவாணர் தாம்.

தீய பெருவனமுஞ் செந்தறையு நந்தறையுந்

தூய பெருவனமுஞ் சோலையுமா-மாய

1

2

கலம்பா முலைமகட்குக் காமருபூங் கண்ணிச் சிலம்பாநின் பின்னர்ச் செலின்.

இந்நூலாசிரியர் பெயர், காலம் முதலிய வரலாறுகள் தெரியவில்லை.

14. கிளவி விளக்கம்

3

களவியற் காரிகை உரையாசிரியர், கிளவி விளக்கம் என்னும் இந்நூலைக் குறிப்பிடுகிறார். வன்னாட்டு நெய்தல்வாய் என்னும் ஊரிலிருந்த ஒருவரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு வெண்பாவினால் இயற்றப்பட்டது இந்நூல். இது அகப்பொருள் சார்பான நூல். இந்நூலாசிரியரின் பெயர், காலம் முதலியன தெரிய வில்லை. இந்நூலிலிருந்து களவியற்காரிகை உரையாசிரியர் மூன்று செய்யுள்களை மேற்கோள் காட்டுகிறார். அச்செய்யுள்கள் இவை:

என்னுயிர் நான்கண் டிளமுலையும் வேய்த்தோளும் பொன்னிறமுங் கொண்டு புனமயில்போல்-மன்னி வயங்குகின்ற நெய்தல்வாய் வன்னாடன் வெற்பி லியங்குகின்ற தாயத் திடை.

சேர்க்கு முலைமேற் சிறியோர் பெரும்பொருள்போல் பார்க்கு மறைக்கும் பலகாலும்-கார்க்கொடையால் வன்கைக் கலிகடந்த வன்னாட னெய்தல்வாய் நின்கைத் தழைவாங்கி நின்று.

அருக்கன் வருவதன்முன் னம்புயப்பூங் கோயிற் திருக்கதவ மாரோ திறந்தார்-மருக்கமழ்தார் வன்னாட னெய்தல்வாய் வல்லியிவ் வல்லிருளில் என்னாட னீவருவா னீங்கு.

1

2

3