உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

வந்தார் சிலர்க்கு வழியறி

வாரொடு வார்த்தைசொன்னாற்

சிந்தாது காணும் பவழச்செவ்

வாயிற் றிருமுத்தமே.

செங்கையில் வாங்கித் திருமுடி

சேர்த்தி விழியிலொற்றிக்

கொங்கையின் மேல்வைத்துக் கொண்டு

நின்றாள் குமரித்துறையுங்

கங்கையு மாடுங் கடகளிற்

றான்வங்கர் காவலவன்

1

பொங்கெயில் சூழ்தடந் தைபொருப்

பர்தந்த பூந்தழையே.

2

மடலே சொரிதொங்கல் வங்கர் குலோத்தமன் வண்கடந்தை

யடலே புரியு மரும்பனி வாடையை யஞ்சும்வஞ்சி

யுடையேயு மன்றி யுயிருங் கிடந்ததென் றோரொருகாற்

கடலே கருங்கழி யேயுரை யீரெங்கள் காதலர்க்கே.

இந்நூலைப் பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை.

30. வச்சத் தொள்ளாயிரம்

3

வீரசோழிய உரையாசிரியராகிய பெருந்தேவனார் தமது உரையில் இந்நூலைக் குறிப்பிடுகிறார். வச்சத்திளங்கோ என்னும் சிற்றரசன்மீது அகப்பொருள்துறையமைத்துப் பாடப்பட்ட 900 வெண்பாக்களை யுடையது இந்நூல் என்பது தெரிகிறது.

வீரசோழியம், அலங்காரப் படலம், 11ஆம் செய்யுள் உரையில் பெருந்தேவனார், இந்நூற் செய்யுள் ஒன்றை மேற்கோள் காட்டுகிறார். அச்செய்யுள் இது:

வேட்டொழிவ தல்லால் விளைஞர் விளைவயலுள்

தோட்ட கடைஞர் சுடுநந்து - மோட்டாமை

வன்புறத்து மீதுடைக்கும் வச்சத் திளங்கோவை

இன்புறுத்த வல்லமோ யாம்.

இச்செய்யுளைப் பற்றி உரையாசிரியர் மேலும் இவ்வாறு கூறுகிறார்: 'இதனுட் சிறப்புடையளாகிய தலைமகளை இகழ்ந்தது தலைமகன் சிறப்