உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

55

பில்லாத பரத்தையர்மாட்டு நிகழா நின்றமையில் நாட்டுக் கடைஞர் உள்ளார். சிறப்பில்லாத நந்தையூன் துப்புடைய ஆமையின் புறத்து உடைத்துத் தின்பர் என்னு மிதனாற் றொடுத்து விளங்கச் சொன்னமை யால், தொகைமொழி யாயிற்று. வச்சத் தொள்ளாயிரம் முழுதும் தொகைமொழி எனக் கொள்க. தொகைமொழி எனினும் சுருக்கம் எனினும் ஒக்கும்.

கீழ்க்காணும் இரண்டு செய்யுள்களும் வச்சத் தொள்ளாயிரச்

செய்யுள்கள்:

உன்னுயிரும் என்னுயிரும் ஒன்றென்ப தின்றறிந்தேன்

மன்னுபுகழ் வச்சத்தார் மன்னவா - உன்னுடைய

பொன்னாகத் தெங்கையர்தம் பொற்கைநகச் சின்னங்கண் டென்னாகத் தேயெரிகை யால்.

வாடை குளிர மருந்தறிவா ரில்லையோ கூட லினியொருகாற் கூடாதோ - ஓடை

6

மதவாரணத் துதயன் வத்தவர்கோ னாட்டிற்

கதவானதோ தமியேன் கண்.

1

2

சோழ அரசனுடைய படைத்தலைவனாகவும் சிற்றரசனாகவும் இருந்த வச்சன் என்பவன் வச்சராயன் என்றும், வத்தராயன் என்றும் கூறப் படுகிறான் பேராசிரியர் திரு. டி. வி. சதாசிவ பண்டாரத்தாரவர்கள். தாம் எழுதிய பிற்காலச் சோழர் சரித்திரத்தில் (பகுதி II. பக்கம் 62-63) வச்சராயனைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்:

66

இவன், கஞ்சாறன் பஞ்சநதி முடிகொண்டானான வத்தராயன் எனப்படுவான். சோழநாட்டுக் கஞ்சாறு என்னும் ஊரின் பஞ்சநதி வாணன் என்பவனுடைய மகன் முடிகொண்டான் என்பது இவனது இயற்பெயர். முதலாங் குலோத்துங்கசோழனுடைய படைத்தலைவர் களில் ஒருவன், இச்சோழ அரசனால் வத்தராயன் (வச்சராயன்) என்னும் சிறப்புப் பெயர் அளிக்கப்பட்டவன்.

وو

முதலாங் குலோத்துங்கன் கி.பி. 12ஆம் நூற்றாண்டின் முற்பகுதி யில் இருந்தவனாதலின், அவன் சேனாபதியாயிருந்த வச்சராயனும் அக்காலத்தவனே. வச்சத் தொள்ளாயிரமும் அக்காலத்தில் இயற்றப் பட்டதே.