உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

வச்சத் தொள்ளாயிரம் பாடிய புலவர் பெயர், அவர் வரலாறு முதலியவை ஒன்றும் தெரியவில்லை. இந்நூலைப் பற்றிய வேறு செய்திகளும் தெரியவில்லை.

31. வல்லையந்தாதி

வல்லை என்பது வல்லம் என்னும் ஊர். இது, வடஆர்க்காடு மாவட்டம் குடியாத்தம் தாலுகாவில் உள்ளது. திருவல்லம் என்னும் இவ் வூரில் பில்வநாதேசுவரர் என்னும் பெயருள்ள சிவன் கோயில் உண்டு. இச் சிவபெருமான் மீது பாடப்பட்டது வல்லையந்தாதி. இந்நூலை இயற்றி யவர். குறட்டி வரதையன் என்பவர். வல்லையந்தாதி இயற்றிய குறட்டி வரதையனுக்கு இக்கோயில் அதிகாரிகள் 100 குழி நிலத்தைப் (தீக்காலி வல்லம் என்னும் ஊரில் உள்ளது) பரிசு அளித்தனர் என்று சாசனங் கூறுகிறது (M.E.R. 293 of 1921). இந்நூல் இப்போது

கிடைக்கவில்லை.

32. விஞ்சைக் கோவை

இந்தக் கோவையைப் பாடியவர் பலபட்டரைச் சொக்கநாதக் கவி ராயர் அவர்கள். இராமநாதபுரம் முத்துராமலிங்க சேதுபதி அரசர்மீது இந்நூல் பாடப்பட்டதென்பர். இரகுநாத சேதுபதியின் அமைச்சரான தெய்வகன்னி என்பவர்மீது பாடப்பட்டது என்றும் கூறுவர்.

தேவைமுத்து ராமலிங்க சேதுபதி மீதுவிஞ்சைக் கோவையென்ற பில்லிவைத்துக் கொன்றாயே - பாவிநீ இட்டகவி தான்வசையா யேன்சொன்னாய் சேர்ந்தபல பட்டரைச்சொக் காமுழுவம் பா.

முத்துராமலிங்க சேதுபதிமீது இந்நூல் பாடப்பட்ட தென்பதற்கு இந்த வெண்பாவைக் காட்டுகிறார்கள். இந்த வெண்பாவைப் பாடினவர், சொக்கநாதக் கவிராயர் காலத்தவரான சுப்பிரதீபக் கவிராயர் அவர்கள்.6

தேவைரகு நாதன்மெச்சுந் தெய்வகன்னி மீதினிலே

கோவையென்று பில்லிவைத்துக் கொன்றாயே - பாவியுன்றன் இட்டடைச்சொல் லார்பொறுப்பார் ஏண்டா மடயபல

பட்டடைச்சொக் காமுழுவம் பா