உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

57

என்னும் இச்செய்யுளைக் காட்டி, இந்தக் கோவை தெய்வ கன்னி என்பவர் மீது பாடப்பட்டதென்பர். இவ்வெண்பாவைப் பாடியவரும் சுப்பிரதீபக் கவிராயர் என்பர். விஞ்சைக் கோவை அரங்கேற்றிய எட்டாம் நாளில் தெய்வகன்னி இறந்தார் என்று கூறுகிறார்கள். விஞ்சை என்பது இராம நாதபுரத்து நெட்டூர் என்பர்.

இந்தக் கோவை சேதுபதி அரசர்மீது பாடப்பட்டதா, அவர் அமைச்சர் தெய்வகன்னிமீது பாடப்பட்டதா என்பது தெரியவில்லை. நூலும் இறந்துபோயிற்று. இது கி.பி. 18ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது.

அடிக்குறிப்புகள்

1. இச்செய்யுள் நம்பி அகப்பொருள் உரையிலும் மேற்கோள் காட்டப் பட்டுள்ளது.

2. மூன்றாவது அடியில் சில எழுத்துக்கள் மறைந்துவிட்டன.

3.

4.

5.

திருத்தொண்டர் திருவந்தாதி.

இந்தச் செய்யுளை இளம்பூரண அடிகள் (தொல். பொருள். அகத்திணை. 51 ஆம் சூத்திரம்) தமது உரையில் பாடபேதத்துடன் மேற்கோள் காட்டுகிறார். அவர் காட்டும் பாடம் இது:

66

'உரைத்திசிற் றோழியது புரைத்தோ வன்றே துருக்கங் கமழு மென்றோள்

துறப்ப வென்றி யிரீ இயரென் னுயிரே.

இது துருக்கம் என உவமை கூறுதலாற் குறிஞ்சி யாயிற்று.

وو

இச்செய்யுள் 'தமிழ்நெறி விளக்கத்' திலும் மேற்கோள் காட்டப் படுகிறது.

6. செந்தமிழ், மூன்றாந் தொகுதி