உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

'குடிப்பிறப் புடுத்துப் பனுவல் சூடி

விழுப்பே ரொழுக்கம் பூண்டு காமுற வாய்மைவாய் மடுத்து மாந்தித் தூய்மையின் காத லின்பத்துட் டங்கித் தீதறு

நடுவுநிலை நெடுநகர் வைகி வைகலும்

அழுக்கா றின்மை யவாவின்மை யென்றாங் கிருபெரு நிதியமு மொருதா மீட்டுத்

தோலா நாவின் மேலோர் பேரவை

யுடன்மரீஇ யிருக்கை யொருநாள் பெறுமெனிற்

பெறுகதில் லம்ம யாமே வரன்முறைத்

தோன்றுவழித் தோன்றுவழிப் புலவுப் பொதிந்து ஞாங்கர் ஞாங்கர் நின்றுழி நில்லாது நிலையழி யாக்கை வாய்ப்பவிம்

மலர்தலை யுலகத்துக் கொட்கும் பிறப்பே.

தாமரை வெண்கிழங்கு விரவி யோராங்குக் கருமலங்கு மிளிரக் கொழுமுகந் தியக்கி பழஞ்சேற்றுப் பரப்பிற் பருமுத லெடுத்து

நெடுங்கதி ரிறைஞ்ச வாங்கிக் கால்சாய்த்து

வாளிற் றுமித்த சூடே மாவின்

சினைகளைந்து பிறக்கிய போர்பே யெருத்தின் கவையடி(ய) வைத்த வுணாவே மருதின்

கொழுநிழற் குவைஇய குப்பையொ டனைத்தினும்

பலர்மகிழ் தூங்க வுலகுபுறந் தரூஉ

மாவண் சோணாட் டூர்தொறும்

ஏரோர் களவழி வாழிய நெடிதே.

சிறுபுன் சில்லி நெடுவிளி யானா மரம்பயில் கானத்துப் பரற்புறங் கண்ட வடியா நெடுநெறிச் செல்லாப் புடையது முல்லை வகுந்திற் போகிப் புல்லருந்திக் கான்யாற்றுத் தெண்ணீர் பருகிக் காமுறக் கன்றுபா லருந்துபு சென்றன மாதோ முன்ப லரும்பிய பானாறு செவ்வாய்ப் புன்றலை மகாஅர் தந்தை

/61

9

10

கன்றுசூழ் கடிமனைக் கவைஇய நிரையே.

11