உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

யானை நிரையுடைய தேரோ ரினுஞ்சிறந்தார்

ஏனை நிரையுடைய ஏர்வாழ்நர்

-

யானைப்

படையோர்க்கும் வென்றி பயக்கும் பகட்டே ருடையோர்க் கரசரோ வொப்பு.

15

நிலம்பொறை யாற்றா நிதிபல கொண்டுங் குலம்பெறுதீங் கந்தணர் கொள்ளார் - நலங்கிளர் தீவா யவிசொரியத் தீவிளங்கு மாறுபோல் தாவா தொளிசிறந்த தாம். 16

ஈட்டிய வெல்லா மிதன்பொருட் டென்பது

காட்டிய கைவண்மை காட்டினார் - வேட்டொறுங் காமருதார்ச் சென்னி கடல்சூழ் புகார்வணிகர்

தாமரையுஞ் சங்கும்போற் றந்து.

வெவ்வாள் மறவர் மிலைச்சிய வெட்சியாற்

செவ்வானஞ் செல்வதுபோற் செல்கின்றார் - எவ்வாயும் ஆர்க்குங் கழலொலி யாங்கட் படாலியரோ

போர்க்குந் துடியயொடு புக்கு.'

17

வாள்வலம் பெற்ற வயவேந்த னேவலால்

தாய்வ லிளையவர் தாஞ்செல்லின் - நாளைக் கனைகுரல் நல்லாவின் கன்றுள்ளப் பாலின் நனைவது போலுமிவ் வூர்.

18

வந்த நிரையி னிருப்பு மணியுடன்

எந்தலை நின்றலை யான்றருவன் - முந்துநீ மற்றவை பெற்று வயவேந்தன் கோலோங்கக் கொற்றவை கொற்றங் கொடு.

19

திரைகவுள் வெள்வாய்த் திரிந்துவீழ் தாடி

நரைமுதியோ னேற்றுரைத்த நற்சொல் - நிரையன்றி எல்லைநீர் வைய மிறையோர்க் களிக்குமால்

வல்லையே சென்மின் வழி.

20

பிறர்புல மென்னார் தமர்புல மென்னார்

விறல்வெய்யோர் வீங்கிருட்கட் சென்றார் - நிரையுங்

கடாஅஞ் செருக்குங் கடுங்களி யானை

படாஅ முகம்படுத் தாங்கு. 21

3

4

LO

5

6

7

00

9

10